'லப்பர் பந்து' நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. சீரியல் நடிகர் தான் மாப்பிள்ளை.. க்யூட் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Monday,October 28 2024]

சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ’லப்பர் பந்து என்ற படத்தில் நடித்த நடிகை, சீரியல் நடிகர் ஒருவரை காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் தற்போது நிச்சயதார்த்தம் ஆகி உள்ளது. இது குறித்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகின்றன.

சமீபத்தில் வெளியான ’லப்பர் பந்து என்ற படத்தில் நடித்த நடிகை மௌனிகா, பிளாக் ஷீப் வீடியோக்களிலும் கனா காணும் காலங்கள் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், இவருக்கும் கன்னத்தில் முத்தமிட்டால் என்ற சீரியலில் நாயகனாக நடித்த சந்தோஷ் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

நடிகர் சந்தோஷ் அண்ணா சீரியலில் நடித்து வந்த நிலையில், சமீபத்தில் அந்த தொடரில் இருந்து விலகினார்; தொடர்ந்து அவர் திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சந்தோஷ் மற்றும் மௌனிகா ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், தற்போது பெற்றோர் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ரசிகர்கள் இந்த ஜோடிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

More News

விஜய் சொன்ன குட்டிக்கதையில் அந்த சின்னப்பையன் யார் தெரியுமா?

தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு நேற்று நடந்த போது, அதில் பேசிய விஜய், "கெட்ட பையன் சார் அந்த சின்ன பையன்" என்று சிறுவயதிலேயே மன்னராக முடிசூடி போருக்கு புறப்பட்ட பாண்டிய மன்னனின் ஒரு கதையை கூறினார்.

நள்ளிரவில் படப்பிடிப்பின்போது வந்த குரல்.. நயன்தாராவின் க்யூட் ரியாக்சன்.. வைரல் வீடியோ..!

நடிகை நயன்தாரா நள்ளிரவில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது திடீரென தனது ரசிகர் இடம் இருந்து வந்த குரலை நோக்கி பார்த்த அவர் 'தூங்கு' என்று ஸ்வீட்டாக கூடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

உன்னால மட்டும் தான் முடியும்.. முக்கிய பணியை பாடலாசிரியருக்கு கொடுத்த விஜய்..!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாட்டை நடிகர் விஜய் நேற்று பிரமாண்டமாக நடத்தி முடித்த நிலையில், இந்த மாநாடு குறித்து அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன

விக்ரமின் 'வீரதீர சூரன்' பிசினஸ் ஸ்டார்ட்ஸ்.. தமிழக ரிலீஸ் உரிமை யாருக்கு தெரியுமா?

விக்ரம் நடிக்கும் "வீர தீர சூரன்" படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் பிஸினஸ் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்கா, தங்கை நடிகைகளின் கிளாமர் போஸ்.. கொடுத்து வைத்த கேமிராமேன்..!

அக்கா தங்கை நடிகைகளின் கிளாமர் போஸ் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்த புகைப்படங்களை எடுத்த கேமராமேன் கொடுத்து வைத்தவர் என்ற கமெண்ட்ஸ்