'லப்பர் பந்து' நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. சீரியல் நடிகர் தான் மாப்பிள்ளை.. க்யூட் புகைப்படங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ’லப்பர் பந்து" என்ற படத்தில் நடித்த நடிகை, சீரியல் நடிகர் ஒருவரை காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் தற்போது நிச்சயதார்த்தம் ஆகி உள்ளது. இது குறித்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகின்றன.
சமீபத்தில் வெளியான ’லப்பர் பந்து" என்ற படத்தில் நடித்த நடிகை மௌனிகா, "பிளாக் ஷீப்" வீடியோக்களிலும் "கனா காணும் காலங்கள்" உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், இவருக்கும் "கன்னத்தில் முத்தமிட்டால்" என்ற சீரியலில் நாயகனாக நடித்த சந்தோஷ் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
நடிகர் சந்தோஷ் "அண்ணா" சீரியலில் நடித்து வந்த நிலையில், சமீபத்தில் அந்த தொடரில் இருந்து விலகினார்; தொடர்ந்து அவர் திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சந்தோஷ் மற்றும் மௌனிகா ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், தற்போது பெற்றோர் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ரசிகர்கள் இந்த ஜோடிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout