சிலிண்டர் விலை ரூ.91.50 குறைந்தும் இல்லத்தரசிகள் அதிருப்தி: ஏன் தெரியுமா?

  • IndiaGlitz, [Thursday,September 01 2022]

ஒவ்வொரு மாதமும் முதல் தேதி சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும் என்பதும் அந்த வகையில் இன்று சிலிண்டர் விலை குறைப்பு குறித்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களில் சிலிண்டர் விலை உச்சத்திற்கு சென்றது என்பதும் ஒரு சிலிண்டரின் விலை 1000 ரூபாய்க்கு மேல் அதிகரித்துவிட்டது என்பதால் இல்லத்தரசிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இந்த நிலையில் தற்போது 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.91.50 குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த அறிவிப்பின்படி விலை குறைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் சென்னையில் ரூ.2141 என விற்பனையான சிலிண்டர் விலை ரூ.2,045 என குறைந்துள்ளது. இதனால் வர்த்தகரீதியான சிலிண்டர்களை பயன்படுத்தும் ஹோட்டல்கள், உணவகங்கள், டீக்கடைகள் ஆகியவற்றுக்கு நிம்மதியாக இருக்கும்.

ஆனால் அதே நேரத்தில் வர்த்தகரீதியான சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டாலும் வீட்டு பயன்பாட்டிற்கான 14.2 கிலோ எடையுள்ள எல்பிஜி சிலிண்டர் விலை குறைக்கப்படவில்லை என்பதால் இல்லத்தரசிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.