கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடிக்கு மரண தண்டனையா?
- IndiaGlitz, [Saturday,April 20 2019]
தாய்லாந்து நாட்டில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடிக்கு மரண தண்டனை கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவை சேர்ந்த சட் எல்வர்டோஸ்கி மற்றும் தாய்லாந்தை சேர்ந்த சுப்ரானே தெப்ஃபெட் ஆகிய இருவரும் காதலர்கள். இருவரும் கோடீஸ்வரர்கள் என்பதால் தாங்கள் திருமணத்திற்கு பின் வித்தியாசமான சூழலில் வாழ, கடலில் ஒரு வீட்டை கட்ட முடிவு செய்தனர்.
தாய்லாந்தில் இருந்து 14 மைல் தொலைவில் கடலில் காங்க்ரீட் மூலம் வீடு ஒன்றை கட்டினர். இந்த வீட்டை சமீபத்தில் கண்டுபிடித்த தாய்லாந்து கடற்படையினர் இதுகுறித்து செய்த புகாரின் அடிப்படையில் காதல் ஜோடி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தாய்லாந்து நாட்டின் அனுமதி பெறாமல், நாட்டின் இறையாண்மையை மீறி கடலுக்குள் வீடு கட்டியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றம் நிரூபணம் ஆனால் இருவருக்கும் மரண தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்த வீட்டை கட்டிய நிறுவனம் இதுகுறித்து கூறியபோது, 'இந்த வீடு தாய்லாந்து கடல் எல்லையில் இருந்து 12-25 மைல் தொலைவில் உள்ளது. இது தாய்லாந்து கட்டுப்பாட்டில் வராது. மேலும் இந்த காதலர்கள் இந்த வீட்டை எந்தவித தீய நோக்கத்துடனும் கட்டவில்லை என்று கூறியுள்ளனர்.