ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த இளம் காதலர்கள்: காதல் தோல்வியா?
Send us your feedback to audioarticles@vaarta.com
காதலை பெற்றோர்கள் ஏற்க மறுத்ததால் இளம் காதலர்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் பண்ருட்டி அருகே நடந்துள்ளது
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தொரப்பாடி என்ற கிராமத்தைச் சேர்ந்த சுவாதி என்ற பெண், நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கும் மதன் என்ற பைக் மெக்கானிக் பணி செய்யும் வாலிபருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்து தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர்
ஆனால் இரு தரப்பு பெற்றோர்கள் மற்றும் வீட்டில் உள்ள பெரியவர்கள் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதுமட்டுமின்றி இருவரும் பழக கூடாது என்ற நிபந்தனையும் விதித்தனர்
இந்த நிலையில் தங்களது காதல் நிறைவேறாததால் மனமுடைந்து வருத்தத்தில் இருந்த சுவாதி மற்றும் மதன் நேற்று சென்னை-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். காதல் நிறைவேறாததால் இளம் காதலர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com