காட்டுக்குள் தனிமையில் இருந்த காதல் ஜோடி: காட்டு காட்டு என காட்டிய காவல்துறையின் ட்ரோன்

ஊரடங்கு உத்தரவையும் மீறி சமூக விலகலை கடைபிடிக்காமல் இருப்பவர்களை காவல்துறையினர் ட்ரோன் மூலம் கண்டுபிடித்து வருகின்றனர் என்பது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம். சமீபத்தில் கூட சீட்டு விளையாடியவர்கள், கிரிக்கெட் விளையாடியவர்கள், கால்பந்து விளையாடியவர்கள், ஆகியவர்களை ட்ரோன் கண்டுபிடித்து விரட்டி விரட்டி வீடியோ எடுத்தது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது காட்டுக்குள் தனியாக ஜாலியாக பேசிக்கொண்டு இருந்த காதல் ஜோடியை காவல்துறையின் ட்ரோன் கேமரா விரட்டி விரட்டி படமாக்கிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் ஒரு காதல் ஜோடி மரத்தினடியில் உட்கார்ந்து மும்முரமாக பேசிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் காவல்துறையின் ட்ரோனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அந்த காதலர்கள் அங்கிருந்து ஓட தொடங்கினர். அந்த பெண் துப்பட்டாவால் முகத்தை மூடிக்கொண்டு, அவரது காதலர் ஹெல்மெட்டை மாட்டி கொண்டும் தங்கள் முகத்தை மறைத்து கொண்டு இருசக்கர வாகனத்தில் இருவரும் வேகமாக காட்டை விட்டு வெளியேறினர்.

இருப்பினும் விரட்டி விரட்டி அந்த காதல் ஜோடியை காவல்துறையின் ட்ரோன் துரத்தியது. இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரஜினியின் கட்டளையை மீறிவிட்டோம்: இயக்குனர் பேரரசு

சூப்ப ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிகர் சங்கம், இயக்குனர் சங்கம் உள்பட நலிவடைந்த கலைஞர்களுக்கு 24 டன்கள் அரிசி, பருப்பு உள்பட மளிகை பொருட்களை வழங்கியுள்ளார்.

தளபதி விஜய்யின் அடுத்த நிதியுதவி குறித்த தகவல்

கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஏழை எளிய மக்களுக்கு திரையுலகினர் பலர் நிதியுதவி செய்து வரும் நிலையில் தளபதி விஜய் ரூ.1.30 கோடி நிதியுதவி செய்தா

சூரரை போற்று குறித்த அடுத்த அறிவிப்பை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள 'சூரரைப்போற்று' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று கொண்டிருந்த

கொரோனா சிகிச்சை: சிகாகோவில் வெற்றிபெற்ற Remdesivir மருந்து சீனாவில் படுதோல்வி!!! நடந்தது என்ன???

கடந்த வாரத்தில் அமெரிக்காவின் சிகாகோ Gilead Sciences மருத்துவப் பல்கலைக்கழகம் Remdesivir மருந்தின் மீதான சோதனையில் வெற்றிப் பெற்றதாகச் செய்தி வெளியிட்டது.

காற்று மாசுபாட்டினால் கொரோனா உயிரிழப்பு அதிகமாகிறதா??? உண்மை நிலவரம் என்ன???

கொரோனா நோய் பரவுவது குறித்தும் பாதிப்பு ஏற்படுவது குறித்தும் உலகம் முழுவதும் ஆய்வுகள் நடந்த வண்ணம் இருக்கின்றன