'வாரிசு' படத்துடன் கனெக்சன் ஆன 'லவ் டுடே': தயாரிப்பாளரின் மகிழ்ச்சியான ட்விட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
’கோமாளி’ பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய ‘லவ் டுடே’ திரைப்படம் விஜய் நடித்து வரும் 'வாரிசு’ திரைப்படத்துடன் கனெக்ஷன் ஆன தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடித்த ’கோமாளி’ திரைப்படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன், அந்த படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து ’லவ் டுடே’ என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் அவரே ஹீரோவாக நடித்தார் என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் தற்போது 20 கோடி வரை வசூல் செய்து வருவதாகவும் இன்னும் அதிகமாக வசூல் செய்து கொண்டே இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழில் மிகப் பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிட தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் என்ற நிறுவனம் பெற்றுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் தனது டுவிட்டரில் ’லவ் டுடே’ திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பில் விரைவில் வெளியிட உள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த நிறுவனம்தான் விஜய் நடித்துவரும் ’வாரிசு’ படத்தை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ‘லவ் டுடே’ என்ற டைட்டில் விஜய் நடித்த படத்தின் டைட்டில் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ‘லவ் டுடே’ படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தில் ராஜூ அவர்களுடன் ’லவ் டுடே’ படத்தின் தெலுங்கு பதிப்பை வியாபாரம் செய்ததில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மாதம் ‘லவ் டுடே’ படத்தின் தெலுங்கு பதிப்பு ரிலீசாகும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ படத்தை அடுத்து மீண்டும் அவருடன் இணைந்து மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
Super happy to be Associated with renowned Producer #DilRaju Sir @SVC_official to take #LoveToday in Telugu to the world this November. This is our second association after #SantoshSubramaniam #Bommarillu @pradeeponelife @Ags_production @aishkalpathi pic.twitter.com/XsXBr85i3O
— Archana Kalpathi (@archanakalpathi) November 8, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com