'லவ் டுடே' இந்தி ரீமேக்கில் நடிக்கும் இருவருமே பிரபல நட்சத்திரங்களின் வாரிசுகளா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரதீப் ரங்கநாதன் நடித்த இயக்கிய ’லவ் டுடே’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் 150 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்தது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் ‘லவ் டுடே’ படத்தின் இந்தி ரீமேக் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நடிக்கக் கூடிய நட்சத்திரங்கள் தகவல்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் கேரக்டரில் அமீர்கான் மகன் ஜுனைத் கான் நடிக்க இருப்பதாகவும் அதே போல் இவானா கேரக்டரில் ஸ்ரீதேவி மகள் குஷி கபூர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை ’சீக்ரெட் சூப்பர் ஸ்டார்’ ’லால் சிங் சத்தா’ ஆகிய படங்களை இயக்கிய அத்வைத் சந்தன் என்பவர் இயக்க இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
தமிழில் மாபெரும் வெற்றி பெற்று வசூலில் சாதனை செய்த ’லவ் டுடே’ திரைப்படம் ஹிந்தியிலும் சூப்பர் ஹிட்டாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments