'லவ்டுடே' ஹிந்தி ரீமேக்.. இரண்டு பிரபலங்களின் வாரிசுகள் நடிக்கின்றார்களா?
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவான ’லவ் டுடே’ திரைப்படம் வெறும் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பதும் இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றி கோலிவுட் திரை உலகை ஆச்சரியப்படுத்தியது என்பதும் தெரிந்ததே.
பிரதீப் ரங்கநாதன், இவானா, சத்யராஜ் உள்ளிட்டோர் மிகவும் கச்சிதமாக நடித்திருந்தனர் என்பதும் திரைக்கதை சுவாரசிமாக இருந்ததால் இந்த படம் அனைத்து தரப்பினர்களுக்கும் பிடித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ’லவ் டுடே’ திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது இது குறித்த தகவல் கசிந்து உள்ளது. ’லவ் டுடே’ திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் இவானா நடித்த கேரக்டரில் அமீர்கான் மகன் மற்றும் ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அமீர்கான் மகன் ஜுனைத்கான் மற்றும் ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷிகபூர் ஆகிய இருவரும் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஏற்கனவே பல தமிழ் வெற்றி திரைப்படங்களை ரீமேக் செய்யும் போது பாலிவுட் திரையுலகினர் சொதப்பியுள்ளதால் இந்த படத்தையாவது அவர்கள் உருப்படியாக எடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments