'தளபதி 68' படத்தில் இணையும் 'லவ் டுடே' நாயகி.. என்ன கேரக்டர் தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,November 28 2023]

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 68’ திரைப்படத்தில் சினேகா, லைலா மற்றும் மீனாட்சி சவுத்ரி ஆகிய மூன்று நாயகிகள் நடித்து வருகின்றனர் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய ’லவ் டுடே’ படத்தின் நாயகியும் இந்த படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமாக தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’தளபதி 68’. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து ஆகிய பகுதிகளில் நடந்த நிலையில் அடுத்த கட்டமாக இஸ்தான்புல் பகுதியில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் மோகன், பிரபுதேவா உட்பட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ’லவ் டுடே’ நாயகி இவானா இந்த படத்தில் விரைவில் இணைய உள்ளதாகவும் அவர் விஜய்யின் தங்கை கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'தனி ஒருவன்' மட்டுமல்ல, இன்னொரு படத்தின் 2ஆம் பாகமும் விரைவில்: மோகன் ராஜா

மோகன் ராஜா இயக்கத்தில், ஜெயம் ரவி நடிப்பில் உருவான 'தனி ஒருவன்' திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே.

புடிச்சத பண்ணினா லட்சம் பேரும் சூப்பர் ஸ்டார் ஆகலாம்: நயன்தாராவின் 'அன்னபூரணி' டிரைலர்..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'அன்னபூரணி' என்ற திரைப்படம் டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில்

ஜோவிகா உள்பட நாமினேஷனில் சிக்கிய 8 பேர்.. இந்த வாரம் வெளியேறுவது யார்?

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் நிலையில் இந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடந்ததால் போட்டியாளர்கள் தாங்கள் நாமினேஷன் செய்யும் இரண்டு போட்டியாளர்களை

டாக்டர் + துப்பாக்கி.. எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விஷால் - ஹரி படத்தின் போஸ்டர்..!

விஷால் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் 'விஷால் 34' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்  போஸ்டர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் இந்த அறிவிப்பு போஸ்டரில் துப்பாக்கி மற்றும்

இயக்கம், நடிப்பை அடுத்து இன்னொரு அவதாரம் எடுக்கும் லோகேஷ் கனகராஜ்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தமிழ் திரை உலகில் 5 திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ஓரிரு திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்ற செய்தியை பார்த்தோம்.  இந்த நிலையில் இயக்கம்,