பேயுடன் காதல் திருமணம்! இப்போது விவாகரத்து! அதிரவைக்கும் காரணம்!
- IndiaGlitz, [Tuesday,May 28 2019]
அயர்லாந்து நாட்டை சேந்த பெண் ஒருவர், ஹாலிவுட் திரைப்படமான பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் திரைப்படத்தில் வரும் ஜாக் ஸ்பேரோ என்கிற காதாபாத்திரத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாகவும் கூறி அதிர்ச்சி கொடுக்கிறார்.
வித்தியாசமாக திருமணம் செய்து கொள்ள நினைத்த, வடக்கு அயர்லாந்து நாட்டை சேர்ந்த அமான்டா டீகியூ என்ற பெண் பேயுடன் திருமணம் செய்துகொண்டார்.
இவர் 2016 ஆம் ஆண்டு 1700-களில் நடந்த ஒரு சம்பவத்தை கதையாக ஏழுதினார். அப்பொழுது அமானுஷ்ய சக்தி அவரை பின்தொடர்ந்ததாகவும் அதனுடன் தொடர்புகொண்டு பேசியபோது, அதன் பெயர் ஜாக் என்றும் 300 வருடங்களுக்கு முன் கடற்கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்ததாகவும் கூறினார்.
ஒரு நிலையில் இருவரும் காதலிக்க துவங்கியதால், அதையே திருமணமமும் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் அனைவர் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது அந்த அமானுஷ்ய சக்தி, தன்னுடைய உடலில் புகுந்து, சக்திகளை உறிஞ்சியதால், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாகவும், கூறி தற்போது அந்த அமானுஷ்ய சக்தியிடம் இருந்து விவாகரத்து பெற்று விட்டதாகவும் கூறி அதிர்ச்சிகொடுத்துள்ளார்.
சில மாந்திரீகம் மூலமாக மட்டுமே அந்த ஆவி தன்னிடம் இருந்து பிரிந்து சென்றதாகவும், தற்போது தன்னுடைய உடல் நிலை சீராக உள்ளதாகவும் கூறியுள்ளார் அமான்டா டீகியூ.