அனிருத்தின் மேஜிக்கல் வாய்ஸ்: 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் சிங்கிள் பாடல்..!

  • IndiaGlitz, [Wednesday,October 16 2024]

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ’லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் இன்று வெளியாகி உள்ள நிலையில் அனிருத் பாடிய இந்த பாடல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி உள்ள ‘லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் சற்றுமுன் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அனிருத் இசையமைத்த இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதி இருக்க அனிருத் இந்த பாடலை பாடியுள்ளார். மெலடி பாடலாக அமைந்துள்ள இந்த பாடல் முதல் முறை கேட்கும் போதே அசத்தலாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அனிருத்தின் மேஜிக் வாய்ஸ் மனதை கவர்கிறது என்றும் கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.

பிரதீப் ரங்கநாதன், எஸ் ஜே சூர்யா, கீர்த்தி ஷெட்டி, யோகி பாபு, சீமான், கௌரிகிஷான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிய இந்த படம் அடுத்த ஆண்டு காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதி வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இன்று சிங்கிள் பாடல் வெளியாகிய நிலையில் அடுத்தடுத்து டீசர், ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் அது குறித்து அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.