'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'.. வேற லெவல் லுக்கில் நடிப்பு அரக்கன் எஸ்.ஜே.சூர்யா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கராஜன் நடிப்பில் உருவாகி வரும் ’லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தில் எஸ்ஜே சூர்யா ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் அவரது கெட்டப் குறித்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் திரை உலகில் தற்போது பிசியான நடிகராக இருப்பவர் எஸ்ஜே சூர்யா என்பதும் சமீபத்தில் வெளியான ’இந்தியன் 2 ’மற்றும்’ ராயன்’ ஆகிய படங்களில் நடித்த எஸ்ஜே சூர்யா, தற்போது ‘கேம் சேஞ்சர்’, ‘இந்தியன் 3’, ‘வீரதீர சூரா ’ உட்பட கிட்டத்தட்ட அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். அது மட்டும் இன்றி அவர் விரைவில் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிரதிப் ரங்கநாதன் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ’லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தின் வட்டத்திலும் ஒரு முக்கிய இடத்தில் எஸ்ஜே சூர்யா நடித்து வரும் நிலையில் அவரது கெட்டப் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் எஸ்ஜே சூர்யா மாஸ் லுக்கில் இருப்பதை அடுத்து இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே சூர்யா, கீர்த்தி ஷெட்டி, யோகி பாபு, மிஷ்கின், ஆனந்த்ராஜ், மாளவிகா, சுனில் ரெட்டி, கெளரி கிஷான், மணிமேகலை, ராதாரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிரதீப் ராகவ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ரெளடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
Introducing the fabulous @iam_SJSuryah ⭐️ #LoveInsuranceKompany #LIK
— Seven Screen Studio (@7screenstudio) July 27, 2024
@VigneshShivN @pradeeponelife @IamKrithiShetty @anirudhofficial@iYogiBabu @Gourayy @sathyaDP @PradeepERagav@PraveenRaja_Off @Rowdy_Pictures @proyuvraaj pic.twitter.com/AYLdwwQ4W0
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments