'லியோ' முதல் காட்சியில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த 'லியோ’ திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், இந்த படம் திரையிட்ட தியேட்டரில் காதல் ஜோடி மாலை மாற்றி திருமணம் செய்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று காலை 9 மணிக்கு 'லியோ’ படத்தின் முதல் காட்சி தொடங்கியுள்ளது. ஆனால் அண்டை மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கு காட்சிகள் தொடங்கி பாசிட்டிவ் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் புதுக்கோட்டையில் உள்ள ஒரு தியேட்டரில் 'லியோ’ படம் பார்க்க வந்த காதல் ஜோடி திடீரென மாலை மாற்றி, மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இதை பார்த்து ஆச்சரியமடைந்த அங்குள்ள விஜய் ரசிகர்கள் அந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். இது பொருத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது
'லியோ’ படத்தின் முதல் காட்சியின் போது தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்திருந்தோம் என்றும் அதன்படி திருமணம் செய்து கொண்டோம் என்றும் அந்த தம்பதிகள் தெரிவித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com