ஆமா, லவ் பண்றது உண்மைதான்.. காதலை போட்டுடைத்த பிக்பாஸ் போட்டியாளர்.. ஐஷுவுக்கு ஏன் வருத்தம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களான மணி சந்திரா மற்றும் ரவீனா இருவரும் காதலிப்பதாக கூறப்பட்ட நிலையில் ஏற்கனவே விசித்ரா ’நீங்கள் ரெண்டு பேரும் லவ் பண்றீங்களா’ என்று ஓபனாகவே கேட்டுவிட்டார். அதற்கு மணி மற்றும் ரவீனா ’இல்லை நாங்கள் இருவரும் நண்பர்கள் தான், கொஞ்சம் நெருக்கமான நண்பர்கள்’ என்று கூறி சமாளித்தார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் மணி மற்றும் ஐஷு ஆகிய இருவரும் பேசிக் கொண்டிருக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது. அதில் ’நீயும் ரவீனாவும் லவ் பண்ணுவதாக வீட்டில் உள்ள எல்லோரும் பேசிக் கொள்கிறார்கள், நானே சில நேரத்தில் பார்த்தேன், அதெல்லாம் உண்மையா? என்று கேட்க, அதற்கு மணி ’ஆமாம் உண்மைதான் நாங்கள் லவ் பண்ணுகிறோம், ஆனால் அதை சரியான நேரம் வரும்போது சொல்லலாம், அதுவும் குறிப்பிட்ட சிலரிடம் மட்டும் சொல்லலாம் என்று நினைத்திருந்தேன்’ என்று கூறினார்.
அப்போது அங்கு ரவீனா வருகிறார். அவரிடம் ’நீங்கள் லவ் பண்ணுவதை ஏன் என்னிடம் சொல்லவில்லை என ஐஷு கேட்க, அதற்கு ரவீனா ’உன்னிடம் ஏன் நான் சொல்ல வேண்டும், இது எங்கள் பர்சனல் விஷயம் என ரவீனா சொல்ல, ‘எனக்கு ரொம்ப நாளாக மணியை தெரியும், நான் ஒரு விஷயத்தை மணியிடம் மறைத்தால் அவன் எப்படி வருத்தப்படுவானோ, அதே போல் அவன் ஒரு விஷயத்தை மறைத்தால் நான் வருத்தப்படுவேன்’ என்று சொல்ல அதை கண்டுகொள்ளாத ரவீனா, ‘எனக்கு பசிக்குது நான் சாப்பிட போகிறேன் என்று ரவீனா அந்த இடத்தில் இருந்து சென்று விட்டார்.
அதன் பிறகு ரவீனா காதல் குறித்து மணி ஐஷுவிடம் விளக்கிக் கொண்டிருக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன. மொத்தத்தில் இந்த சீசனில் ஒரு லவ் ஜோடி உறுதியாகிவிட்டதை அடுத்து இனி வரும் நாட்களில் ரொமான்ஸ் காட்சிகள் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Aishu's conversation with Mani about Raveena (1/4).
— Bigg Boss Follower (@BBFollower7) October 12, 2023
Love track confirmed.#BiggBossTamil7 pic.twitter.com/3Nb7kk9If5
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments