விற்பனையாகாத லாட்டரி சீட்டுக்கு ரூ.12 கோடி பம்பர் Prize.. துள்ளிக் குதிக்கும் தமிழர்!

  • IndiaGlitz, [Wednesday,January 20 2021]

தமிழகத்தில் லாட்டரி சீட்டுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனை இன்றும் கொடிகட்டிப் பறந்து வருகிறது. இந்நிலையில் கேரளா எல்லையில் லாட்டரி சீட்டுகளை வாங்கி விற்பனை செய்து வந்திருக்கிறார் தென்காசியை சேர்ந்த ஷரபுதீன். இவருக்கு விற்பனை ஆகாத லாட்டரி சீட்டு ஒன்றில் ரூ.12 கோடி பம்பர் பிரைஸ் அடித்து இருக்கிறது. இதனால் அவர் மகிழ்ச்சி கடலில் தத்தளித்து வருகிறார்.

கேரள அரசு சார்பில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டதை ஒட்டி முதல் பரிசு ரூ.12 கோடி பரிசுத்தொகை என அறிவிக்கப்பட்டு லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டது. இதற்கான குலுக்கல் கடந்த 17 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் முதல் பரிசு விழுந்த லாட்டரி யாரிடம் இருக்கிறது என்பதே பரிசுக் குழுவிற்கு தெரியாமல் இருந்து வந்தது. இதற்கான அறிவிப்பை மீண்டும் பரிசுக்குழு வெளியிட்டபோது கொல்லம் மாவட்டம் ஆரியங்காவில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்த ஷரபுதீன் தன்னிடம் விற்பனை ஆகாமல் இருந்த ஒரு சீட்டிற்குத்தான் முதல் பரிசு விழுந்து இருக்கிறது என்பதை கண்டுபிடித்து உள்ளார்.

இதனால் அந்த சீட்டை எடுத்துக் கொண்டு ஷரபுதீன் திருவனந்தபுரத்துக்குச் சென்று முதல் பரிசு ரூ.12 கோடிக்கான ஒப்பந்தத்தை கடந்த 2 தினங்களுக்கு முன்பு பெற்று வந்தார். மேலும் இதுவரை விற்பனை ஆகாத லாட்டரி சீட்டுகளில் இருந்து சிறிய பரிசுகள் மட்டுமே விழுந்து இருக்கின்றன. ஆனால் இவ்வளவு பெரிய தொகை எனக்கு வரும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. மேலும் நான் பெறப்போகும் தொகையை வைத்து என்ன செய்யலாம் என்ற திட்டமும் இதுவரை இல்லை என மகிழ்ச்சிப் பொங்க கூறியுள்ளார்.

More News

மக்களால் நேரடியாக முதல்வர் ஆனேன்… எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை!

வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார்.

சிஎஸ்கேவில் இருந்து விலகும் முன்னணி கிரிக்கெட் வீரர்… அதிர்ச்சி டிவிட்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய முன்னாள் ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங்(40) தற்போது அணியில் இருந்து விலகுவதாக டிவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

நடிகர் விமல் மீது போலீஸில் புகார்: பூசாரி கூறிய திடுக்கிடும் குற்றச்சாட்டு!

நடிகர் விமல் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அவரது சொந்த ஊரைச் சேர்ந்த பூசாரி ஒருவர் திடுக்கிடும் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

80களின் நெருங்கிய தோழியை சந்தித்த நதியா: வைரல் புகைப்படம்!

மலையாள படங்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகை நதியா கடந்த 1985ஆம் ஆண்டு பாசில் இயக்கிய 'பூவே பூச்சூடவா' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.

'மாநாடு' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்: சிம்பு ரசிகர்கள் குஷி!

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான 'ஈஸ்வரன்' திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சிம்பு நடித்து வரும் மற்றொரு திரைப்படமான