மத்திய தார் பாலைவனத்தில் வளைந்து நெளிந்து ஓடிய ஆறு!!! ஆச்சர்யமூட்டும் தகவல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
பொதுவா தண்ணீரே இல்லாமல் வறண்டு கிடக்கும் பகுதிக்குப் பெயர்தான் பாலைவனம். அதுவும் நம் இந்தியாவில் பெரிய பாலைவனமாகக் கருதப்படுவது தார் பாலைவனம். அந்தப் பாலைவனத்தில் 172 ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் ஒரு ஆறு வளைந்து நெளிந்து சென்றதற்கான ஆதாரத்தை ஒரு ஆர்ய்ச்சி ஆய்விதழ் வெளியிட்டு இருக்கிறது.
172 ஆயிரம் ஆண்டு என்பது கிட்டத்தட்ட கற்காலத்தைக் குறிக்கும் காலக்கட்டம் என்பதையும் அந்த ஆய்விதழ் சுட்டிக் காட்டியிருக்கிறது. கற்காலத்தின் மத்தியில் “நல்” எனும் பெயர்க் கொண்ட ஒரு ஆறு தார் பாலைவனத்தின் நடுவே வளைந்து சென்றதற்கான ஆதாரத்தையும் அந்த ஆய்விதழ் வெளியிட்டு இருக்கிறது. மேலும் இந்த ஆற்றங்கரையை ஒட்டி அக்காலக்கட்டத்தில் நாகரிகம் வளர்ந்ததற்கான அடையாளத்தையும் மக்கள் நெருக்கமாக வாழ்ந்ததற்கான அடையாளத்தையும் கண்டுபிடித்து உள்ளனர்.
இதுவரை ஆற்றங்கரைகளை ஒட்டியே நாகரிகம் வளந்து வந்திருக்கிறது என்பதை ஒவ்வொரு வரலாறுகளும் நிரூபித்து இருக்கிறது. அந்த வகையில் தார் பாலைவனத்தில் ஓடிய ஆறும் அந்தக் காலக்கட்டத்தில் வாழ்ந்த மக்களுக்கான முக்கிய வாழ்வாதாரமாக இருந்திருக்க வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.
தற்போதுள்ள ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானீர் எனும் பகுதியில்தான் இந்த ஆறு ஓடியிருக்க வேண்டும் எனெ ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேலும் இந்த ஆற்றங்கரையை ஒட்டி மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளத்தையும் கண்டுபிடித்து உள்ளனர். செயற்கைகோளின் உதவியுடன் அப்பகுதியில் ஆய்வுசெய்த போது மேலும் தார் பாலைவனத்தில் ஓடிய ஆறு எந்த பகுதி நோக்கி பாய்ந்தது, எவ்வளவு நீளம் இருந்தது என்பது வரை பல்வேறு தகவல்களை தொகுத்தும் வெளியிட்டு உள்ளனர்.
இதனால் மத்திய தார்பாலைவனத்தில் தற்போது உள்ள ராஜஸ்தானின் பிகானீர் பகுதியில் சுமார் 172 அல்லது 140 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அந்த ஆறு பாய்திருக்க வேண்டும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. மேலும் ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றுப் பகுதியில் இருந்து சுமார் 200 கி.மீ தூரத்தில் பழைய ஆறு ஓடியிருக்க வேண்டும் எனவும் கணிக்கப்பட்டு இருக்கிறது.
ஒரு காலத்தில் வளமாக இருந்த அந்த்ப் பகுதி காலம் செல்லச் செல்ல மழைவளம் குறைந்து பாலைவனமாக மாறியிருக்கலாம் என்றும் அந்த ஆய்விதழ் குறிப்பிட்டு இருக்கிறது. ஆனால் தார் பாலைவனத்தில் ஓடிய ஆறு கிட்டத்தட்ட 95 முதல் 78 ஆயிரம் ஆண்டுகள் வரை ஆறு பாய்ந்தோடி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout