நடிகையை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி

  • IndiaGlitz, [Tuesday,April 24 2018]

சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெறுவதற்காக தான் பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானதாக அதிர்ச்சி தகவலை அளித்து வரும் ஸ்ரீரெட்டி டோலிவுட் திரையுலகின் பல பெரிய மனிதர்களின் முகத்திரையை கிழித்து வருகிறார்.

இந்த நிலையில் பாலிவுட் டான்ஸ் மாஸ்டரும் நடிகையுமான சரோஜ்கான், சினிமாவில் வாய்ப்புக்காக படுக்கைக்கு செல்வது காலங்காலமாக நடந்து வரும் ஒன்றுதான் என்று கூறியுள்ளார். இதற்கு நடிகை ஸ்ரீரெட்டி கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்ரீரெட்டி கூறியபோது, 'வாய்ப்புக்காக படுக்கை என்ற வழக்கத்தை கடுமையாக எதிர்ப்பதாகவும், செக்ஸ் அடிமையாக இருக்க யாரும் விரும்புவதில்லை என்றும் கூறினார். மேலும் உடன்கட்டை, குழந்தை திருமணம் ஆகியவை ஒழிந்துவிட்ட இந்த நாடு தற்போது புதிய வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த நிலையில் வாய்ப்புகாக படுக்கை என்ற காலங்காலமாக நடந்து வரும் வழக்கம் தவறு அல்ல என்று சரோஜ்கான் கூறியுள்ளது வருத்தம் அளிக்கிறது. 

ஒரு பெண்ணே இதை ஆதரித்து பேசுவது வருத்தத்தையும் ஆச்சரியத்தையும் அளிக்கின்றது. நான் சரோஜ்கான் மீது வைத்திருந்த மரியாதையை இழந்துவிட்டேன். இளம் நடிகைகளுக்கு அவர் கூறும் அறிவுரை இதுதானா? என்று சரோஜ்கானை வம்புக்கு இழுத்துள்ளார் ஸ்ரீரெட்டி