"தொலைந்து போன தங்க நகரம்".....! எகிப்தில் கண்டுபிடிப்பு....!

  • IndiaGlitz, [Wednesday,April 14 2021]

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதையுண்ட நகரம் ஒன்று, கடந்த செப்டம்பரில் ஏப்ரல் மாதம் எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

இப்படி தோண்டி எடுக்கப்பட்ட நகரத்தை தொலைந்து போன தங்க நகரம் என்றும், ஆட்டென் என்றும் கூறுகிறார்,தொல்லியல் நிபுணரான ஸாஹி ஹவாஸ். இந்த இடத்தை தோண்டுகையில் ஆய்வாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இப்படிப்பட்ட சுவாரசியமான இடம் எகிப்தின் தலைநகரான கெய்ரோவிலிருந்து, 500கிமீ தொலைவில் அமைந்துள்ளது. லக்சர் எனும் நகருக்கு அருகில் 'ஆட்டென்' கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதை தோண்ட ஆரம்பித்த சில நாட்களில், அங்கு மக்கள் வாழ்ந்ததற்கு ஆதாரமாக அவர்கள் வசித்த பகுதிகள்,சேதமில்ல மதில் சுவர்கள், சேமிப்பு கிடங்குகள், பேக்கரி மற்றும் அவன் உள்ளிட்டவை கிடைத்துள்ளன. மக்கள் பயன்படுத்திய கருவிகள் மற்றும் பொருட்களை வைத்து பார்க்கும் போது, அக்கால மக்கள் நாகரீமாக வாழ்ந்துள்ளனர் என்பதை கண்டறியமுடிகிறது. மேலும் இந்த நகரம் எகிப்தை ஆட்சி செய்த, பாரோ மன்னர்களுள் ஒருவரான மூன்றாம் ஆமென்ஹோடெப், காலத்தை சார்ந்ததாகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது . இவரது ஆட்சியில் மக்கள் பயன்படுத்திய வண்ண மண்பாண்டங்கள் மற்றும் உருள்வண்டு பொறிக்கப்பட்ட தாயத்துக்கள் உள்ளிட்டவையும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அய் மற்றும் துத்தன்காமுன் என்பவர்கள் பாரோ மன்னரின் ஆட்சிக்கு பின் அங்கு வாழ்ந்துள்ளனர் என்றும் அறியப்படுகிறது.

ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியான, பெஸ்டி பிரியன் தான் எகிப்து குறித்த வரலாறுகளை ஆய்வு செய்து வருகின்றார். 1992-இல் கண்டுபிடிக்கப்பட்ட துத்தன்காமுன் கல்லறைக்குப்பிறகு, மிகச்சிறந்த கண்டுபிடிப்பாக இது கருதப்படுகிறது. 1888,1889 மற்றும் 1912 முதல் 1920 வரை இங்கு ஆய்வு செய்ய பல ஆராய்ச்சியாளர்கள் ஆர்வம் காட்டி வந்தனர். மேலும் இந்த இடத்தில் பொக்கிஷங்கள் மற்றும் கல்லறைகள் கிடைக்கும் என ஆய்வாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

முதன் முதலாக நியூ யார்க் நகரின், 'மெட்ரோபோலிட்டன் மியூசியம்' தான் தனிக்குழுவை அமைத்து ஆராய்ச்சி செய்ய அவர்களை அனுப்பி வைத்தது. எகிப்தின் தொன்மையான வரலாற்றை உலக மக்களுக்கு கொண்டுவரவும், அங்குள்ள சுற்றுலா துறையை மேம்படுத்தவும் ஆய்வாளர்கள் பல முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். அவ்வகையில் இந்த நகரம் ஓட்டுமொத்த மனித குலத்திற்கும் பழம் கதைகளை கூறும் என மக்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

மோடிக்கு சவால் விடும் லேடி...! சபாஷ் சரியான போட்டி....!

மாத்துவா சமூகத்திற்கு நான் எதையும் செய்யவில்லை என மோடி கூறுகிறார்.

ஆம்பூர் காவலர்கள் உற்சாகமாக வேலை செய்ய புதிய முயற்சி...!

கோடை வெயிலை தாக்குபிடிக்க முடியாத காரணத்தால், போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்ச்சி உணவுப்பொருட்களை வழங்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார். 

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்படுகிறதா...! டெல்லி முதல்வர் கடிதம்....!

கொரோனா தீவிரமாகி வருவதால், சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளை தள்ளிவைக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

'குக் வித் கோமாளி' கிராண்ட் ஃபினாலே: ஷிவாங்கி பதிவு செய்த உருக்கமான டுவீட்

கடந்த சில மாதங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சி இன்றுடன் முடிவடைகிறது. இன்று மதியம் 2 மணிக்கு 5 மணி நேர நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது

'அந்நியன்' படத்தின் இந்தி ரீமேக்: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஷங்கர்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான 'அந்நியன்' திரைப்படம் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே