அடிச்சி மண்டைய உடைச்சிடுவேன்: கவினை மிரட்டிய லாஸ்லியா!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் யாருடைய வம்புக்கும் செல்லாமல் அமைதியாக நடக்கும் கூத்துக்களையும் வேடிக்கைகளையும் கவனித்து வரும் லாஸ்லியாவை கவின் வம்புக்கு இழுக்கும் ஒரு காட்சியின் வீடியோ இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றது. இந்த காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படாத காட்சி என்பதால் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் லாஸ்லியா வீட்டின் உள்ளே செல்ல முற்படும்போது கதவருகே நின்று கொண்டிருக்கும் கவின், லாஸ்லியாவுக்கு வழிவிட மறுக்கின்றார். சாண்டி உள்பட பலர் கூறியும் வழிவிட மறுக்கும் கவினை ஒருகட்டத்தில் 'வழிவிடு இல்லையேல் மண்டைய உடைச்சிடுவேன்' என லாஸ்லியா செல்லமாக கவினை திட்டுகிறார். அதன்பின் சாக்சி உதவிக்கு வந்தபின்னரே கவின், லாஸ்லியாவுக்கு வழிவிடுகிறார். இந்த வீடியோ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவில்லை என்றாலும் ஹாட்ஸ்டாரில் இருப்பதால் இதனை பலர் பகிர்ந்து வருகின்றனர்.
லாஸ்லியாவின் இதுபோன்ற சுவாரஸ்யமான காட்சிகளை எடிட் செய்துவிட்டு வனிதாவின் அராஜக காட்சிகளை மட்டும் ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிர்வாகிகளுக்கும் பிக்பாஸ் குழுவினர்களுக்கும் லாஸ்லியா ஆர்மியினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
Kavin flirting with Losliya unseen footage from yesterday's Episode ?? @losliya_Actress @LosliyaArmy #Losliya #LosliyaArmy #losliya_army #kavin #BiggBossTamil #bigbosstamil3 #BiggBoss3 #BiggBoss pic.twitter.com/fo2wofHVOa
— Biggboss3.0 Unseen Vidz (@bb3_unseen_vidz) June 29, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments