திருமணம் குறித்து லாஸ்லியா தெரிவித்த முக்கிய தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டிலை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட லாஸ்லியாவுக்கு மூன்றாவது இடமே கிடைத்தது. இருப்பினும் கோடிக்கணக்கான தமிழக மக்களின் ஆதரவு அவருக்கு இருப்பதால் தமிழகத்தில் அவரது எதிர்காலம் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் பிறந்த கனடாவில் வளர்ந்த லாஸ்லியாவை கோலிவுட் திரையுலகம் விரைவில் வரவேற்கும் என தெரிகிறது.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது கவினை காதலித்த லாஸ்லியாவுக்கு அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக லாஸ்லியாவின் தந்தை லாஸ்லியாவை ரொம்பவே திட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பேட்டியளித்த லாஸ்லியா, ‘என் பெற்றோர்கள் காதல் திருமணம் செய்தவர்கள். நாங்கள் இப்படித்தான் காதலித்தோம் எனச் சொல்லிச் சொல்லிதான் எங்களை வளர்த்தார்கள். எனவே அவர்கள் காதல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பார்கள் என நம்புகிறேன். இருப்பினும் பெற்றோர் சம்மதத்துடன்தான் என் திருமணம் நடக்கும்” என்று தெரிவித்துள்ளார்
மேலும் ‘என் அப்பா என்னை என்ன திட்டினாலும் அவர் என் அப்பா. எங்களுக்குள் எந்த உறவுச் சிக்கலும் கிடையாது. என் நன்மைக்காகவே அவர் பேசியுள்ளார். அவரது சமூகம் அவரை எப்படி நடத்தியது? எனத் தெரியவில்லை. அவர் ரொம்ப பாசமாக இருப்பார்’ என்றும் அவர் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments