நாளை லாஸ்லியாவின் முதல் பட டீசர்: தயாராகி வரும் ஆர்மிகள்!

  • IndiaGlitz, [Sunday,February 28 2021]

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியா நடித்த முதல் திரைப்படம் ’ஃபிரண்ட்ஷிப்’ என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விரைவில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. ’ஃபிரண்ட்ஷிப்’ படத்தின் டீசர் நாளை மாலை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் லாஸ்லியாவின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தோசம் என்பதும் இந்த டீசரை வைரலாக்க அவரது ஆர்மியினர் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ஆக்சன்கிங் அர்ஜுன், லாஸ்லியா, சதீஷ், எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை ஜான் பால்ராஜ் என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.