லாஸ்லியாவிடம் பேசினேன்: வனிதா கூறிய அதிர்ச்சி தகவல்!

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராகிய லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் நேற்று இரவு திடீரென மரணம் அடைந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் லாஸ்லியாவுக்கு பிக்பாஸ் போட்டியாளர் உள்பட ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவுடன் போட்டியாளராக கலந்து கொண்டவர்களின் ஒருவரான வனிதா, இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் ’நான் லாஸ்லியாவுடன் சற்றுமுன் பேசினேன் என்றும் அவர் அழுது கொண்டு இருந்தாலும் மன உறுதியுடன் இருக்கிறார் என்றும் அவர் இலங்கைக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார்

மேலும் விஜய் டிவி நிர்வாகம் இந்திய மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சகத்துடன் பேசி லாஸ்லியாவை இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு செய்து வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் லாஸ்லியாவின் தந்தை கனடாவில் காலமானதை அடுத்து, தற்போது உள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அவருடைய உடல் இலங்கைக்கு வருவதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் ஆகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் லாஸ்லியாவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் என்னுடைய அன்பையும் தெரிவித்தேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

லாஸ்லியாவின் தந்தை இறந்த தகவல் சமூக வலைதளங்களில் நேற்று இரவே வெளிவந்தாலும் அதன்பிறகு லாஸ்லியா எங்கே இருக்கிறார்? எப்போது இலங்கை செல்ல இருக்கிறார்? லாஸ்லியா தந்தையின் உடலை இலங்கைக்கு கொண்டுவருவது எப்படி? என்பது குறித்த எந்த தகவலும் வெளிவராத நிலையில் வனிதாவின் இந்த அப்டேட் லாஸ்லியா ரசிகர்களுக்கு ஆறுதலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

எப்படி தாங்குவாய் மகளே! லாஸ்லியாவுக்கு ஆறுதல் கூறிய பிக்பாஸ் தந்தை!

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் என்பவர் திடீரென நேற்று காலமானதாக வெளிவந்த தகவல் அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது

முதல்முதலாக கொளுத்தி போட்ட பிக்பாஸ்: காதலால் கடுப்பான பாலாஜி!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று அனிதா, சுசித்ரா, ஆரி மற்றும் பாலாஜி ஆகிய நால்வர் நாமினேஷன் செய்யப்பட்ட நிலையில் இதுகுறித்து பிக்பாஸ் முறையான அறிவிப்பை வெளியிடும் இரண்டாவது

2,500 ஆண்டு பழமையான மம்மிக்கள்… புதைப்பொருள் ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு!!!

பழங்கால அரச வம்சத்தவர்கள் மற்றும் போர் வீரர்கள் ஆகியோர் உயிரிழக்கும்போது அவர்களின் உடல்களை பதப்படுத்தும் வழக்கம் (மம்மி) எகிப்து, சீனா போன்ற நாடுகளில் காணப்பட்டது.

சென்னை முதல் குமரி வரை இன்று கனமழை: தமிழ்நாடு வெதர்மேன்!

கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது

வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் முகத்தில் ஸ்பிரே அடித்துக் கொள்ளை!!!

வேலூர் மாவட்டத்தில் ஒரு வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் முகத்தில் ஸ்பிரே அடித்து மர்ம நபர்கள் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர்