லாஸ்லியா தந்தை மரணம் எப்படி நேர்ந்தது? கனடா அரசின் பிரேத பரிசோதனை சான்றிதழ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் மூலம் புகழ்பெற்ற இலங்கை தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் அவர்கள் திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்னர் கனடாவில் மரணம் அடைந்தார். அவருடைய மரணம் லாஸ்லியாவின் குடும்பத்தினர்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த மரணம் குறித்த பிரேத பரிசோதனை அறிக்கையை கனடா அரசு வழங்கியுள்ளது. அதில் மரியநேசனின் மரணம் இயற்கை மரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது
லாஸ்லியாவின் தந்தை மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் கனடா அரசின் பிரேத பரிசோதனை அறிக்கை இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது
மேலும் கனடாவில் காலமான மரியநேசனின் உடல் இன்னும் ஓரிரு வாரத்தில் இலங்கைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்றும், அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
இந்த நிலையில் மரியநேசனின் மரணம் குறித்து எந்தவிதமான வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அவருடைய மைத்துனர் கேட்டுக் கொண்டுள்ளார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com