இறந்த நிலையில் லாஸ்லியா தந்தை: வைரலாகும் வீடியோ
- IndiaGlitz, [Monday,November 16 2020]
பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவின் தந்தை நேற்று இரவு கனடாவில் காலமான தகவல் அவரது குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இந்த நிலையில் சென்னையில் இருக்கும் லாஸ்லியா இலங்கை செல்வதற்காக செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் விஜய் டிவி நிர்வாகம் அவருக்கு உதவி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் லாஸ்லியாவின் தந்தை படுக்கை அறையில் இறந்து கிடக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. முந்தைய நாள் இரவு 2 மணி வரை தன்னிடம் அவர் பேசிக் கொண்டிருந்ததாகவும் அதன்பின்னரே அவர் படுக்கைக்கு சென்றதாகவும் அவருடைய நண்பர் ஒருவர் கூறுவதும் அந்த வீடியோவில் உள்ளது.
படுக்கையில் அவர் தூங்கிக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பால் இறந்து விட்டதாக அவரது நண்பர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் படுக்கையில் இறந்த நிலையில் இருக்கும் மரியநேசன் உடல் அருகில் ஒரு கடிதம் இருப்பதும் அந்த வீடியோவில் தெரிகிறது. அந்த கடிதம் மரியநேசன் வேறு யாருக்கேனும் எழுதியதா? அல்லது அவருக்கு வந்த கடிதமா? என்பது குறித்த தகவல் இல்லை.
இந்த வீடியோவை பார்க்கும் போது பெரும் சோகமாக இருப்பதாக லாஸ்லியாவின் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.