முதல் நாளிலேயே ஆரம்பிக்கப்பட்ட ஆர்மி! யாருக்கு தெரியுமா?
- IndiaGlitz, [Monday,June 24 2019]
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக்பாஸ் 3' நிகழ்ச்சி நேற்று முதல் தொடங்கிய நிலையில் நேற்றைய முதல் நாள் நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு, இலங்கை தமிழ்ப்பெண் லொஸ்லியா, நடிகை சாக்சி அகர்வால், நடிகை மதுமிதா, நடிகர் கவின், நடிகர் சரவணன், நடிகை அபிராமி வெங்கடாச்சலம், நடிகை வனிதா விஜயகுமார், இயக்குனர் மற்றும் நடிகர் சேரன், நடிகை ஷெரின், நடிகர் மற்றும் இசைக்கலைஞர் மோகன் வைத்யா, இலங்கை மாடல் தர்ஷன், நடன இயக்குனர் சாண்டி, மலேசிய மாடல் முகன்ராவ் மற்றும் நடிகை ரேஷ்மா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் போட்டியாளர்கள் ஆவர்.
இந்த நிலையில் சமூக வலைத்தள பயனாளிகளிடையே லொஸ்லியா, சாக்சி அகர்வால், அபிராமி, ஷெரின், தர்ஷன், மற்றும் ரேஷ்மா ஆகியோர்களுக்கு முதல் நாளிலேயே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பிக்பாஸ் 3 பட்டத்தை பெறுவதில் இவர்கள் ஐவருக்கும் நல்ல போட்டி இருக்கும் என்றும், இவர்கள் ஐவரும் கிட்டத்தட்ட 100 நாட்கள் தாக்குப்பிடிக்கும் போட்டியாளர்களாக இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
மேலும் நேற்றைய முதல் நாளிலேயே இலங்கை தமிழ்ப்பெண் லொஸ்லியாவுக்கு சமூக வலைத்தள பயனாளிகள் ஆர்மி ஆரம்பித்து டுவிட்டுக்களையும் பதிவு செய்ய தொடங்கிவிட்டனர். அவருடைய இலங்கை தமிழ் பேச்சு அனைவரும் கவர்ந்தது உண்மை என்றாலும் முதல் நாளிலேயே ஆர்மி என்பதெல்லாம் ஓவர் என்றும் கூறப்படுகிறது. வரும் நாட்களில் இன்னும் சில போட்டியாளர்களுக்கும் ஆர்மி ஆரம்பிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மொத்தத்தில் அடுத்து வரும் 100 நாட்கள் சமூக வலைத்தள பயனாளிகள் சுறுசுறுப்பாக காணப்படுவார்கள் என்பது மட்டும் உண்மை.