17 வருடமாக இரண்டு கால்களை இழந்து இலவச மருத்துவம்! பெண் டாக்டரை கொண்டாடும் மக்கள்!
- IndiaGlitz, [Monday,May 20 2019]
அனைத்து தொழில்களும் பணத்தை மட்டுமே மையமாக வைத்து இயங்கும் இந்த காலகட்டத்தில், கடந்த 17 வருடமாக இரண்டு கால்களை இழந்த நிலையிலும், மக்களுக்காக சேவை செய்து வருகிறார் சீனாவைச் சேர்ந்த லி- ஜுகோங்க் என்கிற பெண் மருத்துவர்.
சராசரி குழந்தைகள் போல் பிறந்த லி- ஜுகோங்க் 4 வயது இருக்கு போது ஏற்பட்ட விபத்தில் எதிர்பாராத விதமாக இரண்டு கால்களையும் இழக்கும் நிலை உருவானது.
கால்களை இழந்த போதிலும், பெற்றோர் மற்றும், உறவினர்கள், நண்பர்கள் கொடுத்த ஊக்கம் இவரின் கனவு படிப்பான மருத்துவ படிப்பை முடிக்க வைத்தது. பின் தனியாக கிளினிக் துவங்காமல், ஏழை, எளிய மக்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு மருத்துவம் பார்க்க துவங்கினார். இது மட்டுமே தனக்கு நிம்மதியை தருவதாகவும் கூறுகிறார் லி- ஜுகோங்க்.
17 வருடமாக இந்த மருத்துவ பணியை மேற்கொண்டு வரும் இவர், தற்போது மூளை சார்ந்த பிரச்சனைக்கு ஆளாகியுள்ளார். என்னினும், மக்களுக்கு உதவி செய்வதை மட்டும் நிறுத்தி கொள்ளவில்லை. இலவசமாக தன்னுடைய சேவையை செய்து வரும் இவரிடம், யாரேனும் விருப்பப்பட்டு பணம் கொடுத்தால், அதனை மற்றவருக்கு மருந்துகள் வாங்க உபயோகித்து கொள்கிறார்.
இவரின் இந்த செயல் சமூகவலைதளத்தில் உள்ள அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் மருத்துவர் லி- ஜுகோங்கை அந்த ஊர் மக்கள் கடவுளுக்கு நிகராகவே பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.