க்யூட்டா பிறந்தநாள் கொண்டாடிய லாஸ்லியா… வைரலாகும் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இளம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்ற லாஸ்லியா தனது பிறந்த நாளை தோழிகளுடன் கொண்டாடியுள்ளார். அதுகுறித்த புகைப்படம் தற்போது சமூகவலைத் தளங்களில் வெளியாகி இருக்கிறது.
இலங்கையைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா மரியநேசன் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக மக்களிடையே பிரபலமானார். அதுவும் இளம் ரசிகர்கள் அவருடைய அழகான தமிழ் உச்சரிப்புக்கு அடிமையாகி ஒரு தனி ஆர்மியே துவங்கியிருந்தனர். அந்த அளவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் லாஸ்லியா தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தார். ஆனாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினுடன் ஏற்பட்ட காதல் காரணமாகக் கலவையான விமர்சனங்களும் அவர்மீது வைக்கப்பட்டன.
இந்நிலையில் பிக்பாஸில் இருந்து வெளியேவந்த லாஸ்லியா தன்னுடைய எடையை முற்றிலுமாகக் குறைத்துவிட்டு படு ஸ்லிம்மாக மாறிவிட்டார். அதைத் தொடர்ந்து வெள்ளித்திரை வாய்ப்புகளும் அவருக்குக் கிடைத்தன. அந்த வகையில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜனுடன் இணைந்து பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் லாஸ்வியாவின் நடிப்பிற்கு பெரும் வரவேற்பு கிடைத்ததும் குறிப்பிடத்தது. அடுத்து மற்றொரு பிக்பாஸ் பிரபலமான தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பா திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது சினிமா நடிகையாகிவிட்ட லாஸ்லியா தனது தோழிகளுடன் இணைந்து பிறந்தநாளை உற்சாகத்துடன் கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத் தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அவருடைய ரசிகர்கள் லாஸ்லியாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com