3 வயதில் ஒரு செஃப்… லட்சக் கணக்கான ரசிகர்களை கவர்ந்த சமையல் வீடியோ!

  • IndiaGlitz, [Friday,March 05 2021]

சமையல் என்பதே ஒரு சலிப்பான வேலை எனப் பலரும் நினைத்துக் கொண்டு இருக்கும்போது 3 வயதில் ஒரு சிறுவன் தனது விதவிதமான சமையல் குறிப்புகளால் ரசிகர்களை ஈர்த்து இருக்கிறார். மேலும் இவரை இன்ஸ்டாவில் பின்தொடரும் ஃபாலோயர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கிறது.

நியூயார்க்கில் உள்ள கிரேட் நெக் நகரில் வசித்து வரும் டோரேண்டினா எனும் பெண், ஒரு சமையல் கலை நிபுணராக இருந்து வருகிறார். இவர் சமைப்பதைப் பார்த்து அவருடைய 1 வயது மகனும் கூடவே சமைக்க தொடங்கி விட்டார் எனக் கூறி நம்மையும் ஆச்சர்யப் படுத்துகிறார். இதுகுறித்து கூறும் தாய் டோரேண்டினா, முதலில் இல்லிரியன் காமராஜ் எளிய உணவான கப் கேக்குகளைத்தான் செய்ய தொடங்கினான். ஆனால் இன்றைக்கு வறுத்த உருளைக் கிழங்கு, வறுத்த கோழி, பீஃப் வெலிங்டன் எனப் பல உணவு வகைகளிலும் தேர்ச்சி பெற்று விட்டான்.

அதனால் இல்லிரியன் சமைக்கும் அனைத்து உணவுகளையும் தனி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறாராம். அந்த வகையில் ilirian cooks எனும் இன்ஸ்டா பக்கத்துக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஃபாலோயர்கள் உள்ளனர். மேலும் ஒரு சிறு குழந்தையின் கைகளில் சமையல் பொருட்கள் தட்டுப்படுவதைப் பார்க்கும்போதே ஒரு தனி உற்சாகத்தை கொடுத்து விடுகிறது. அதையடுத்து இல்லிரியனின் சமையல் வீடியோ தற்போது சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

More News

ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல்… வைரல் பதிவு!

4 தேசிய விருதுகளைப் பெற்று பல மொழிகளிலும் தன்னுடைய இன்னிசை குரலை, பாடல் மூலம் தெளித்து

மாலத்தீவின் அழகு, நயன்தாராவின் பாடல்: விஜய் டிவி டிடியின் வீடியோ வைரல்

மாலத்தீவின் கடல் அழகின் பின்னணியில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பாடலுக்கு போஸ் கொடுக்கும் விஜய் டிவி டிடியின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது 

விஷ்ணுவிஷாலின் அடுத்த படம்: இன்று முதல் படப்பிடிப்பு!

நடிகர் விஷ்ணு விஷால் நடித்த 'காடன்' திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் மார்ச் 26ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்தது

பதுங்கி பாய்வாரா சசிகலா? அரசியல் விலகலைக் குறித்து வைரலாகும் பிரத்யேக பேட்டி!

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை சென்று மீண்டவர் திருமதி சசிகலா.

மானநஷ்ட வழக்கு தொடர்வேன்: புகார் கூறிய தயாரிப்பாளருக்கு தமிழ் ஹீரோ எச்சரிக்கை!

தன் மீது பணமோசடி புகார் அளித்த தயாரிப்பாளர் மீது மானநஷ்ட வழக்கு தொடர்வேன் என தமிழ் ஹீரோ ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது