லண்டன் To கொல்கத்தாவுக்கு பஸ்ஸில டிராவலா??? தலைச் சுற்ற வைக்கும் ஆச்சர்யத் தகவல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமூக வலைத்தளங்களில் கடந்த சில தினங்களாக ஒரு பரபரப்பு தகவல் பகிரப்பட்டு வருகிறது. லண்டன் விக்டோரியா கோச் நிலையத்தில் இருந்து ஒரு பஸ் சர்வீஸ் பல நாடுகளைத் தாண்டி இந்தியாவில் அதுவும் கொல்கத்தா வரையிலும் பயண சேவையை வழங்கியிருக்கிறது. இதுகுறித்த கருப்பு, வெள்ளை புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
லண்டனைச் சார்ந்த ஆல்பர்ட் டிராவல் பஸ் நிறுவனம் விக்டோரியா பஸ் நிலையத்தில் இருந்து 1957 ஏப்ரல் 15 ஆம் நாள் தனது முதல் சேவையைத் தொடங்கி இருக்கிறது. லண்டனில் ஆரம்பிக்கும் இந்த பஸ் சேவை பெல்ஜியம், ஜெர்மனி, ஆஸ்திரியா, யூகேஸ்லேவியா, பல்கேரியா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் , வழியாக இந்தியாவிற்குள் நுழையும். இந்தியாவிற்குள் டெல்லி, ஆக்ரா, அலகாபாத், பனாரஸ் வழியாக இறுதியில் கொல்கத்தாவை வந்து சேரும். இப்படி அந்த பஸ் பயணம் செய்யும் ஒட்டு மொத்த தூரம் 7,957 கிலோ மீட்டர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
இந்த பஸ் தனது பயணத்தை முடித்துக் கொள்ள 48 நாட்களை எடுத்துக் கொண்டு இருக்கிறது. இடையில் பயணிகள் பல இடங்களில் ஷாப்பிங்கும் செய்து கொள்ளலாம். இஸ்தான்புல், கவுல், ஜான்ஸ்பால், டெக்ரான், புதுடெல்லி போன்ற இடங்களில் பயணிகள் ஜாலியாக ஷாப்பிங்கும் செய்து கொள்ளவும் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். லண்டன் முதல் கொல்கத்தா வரையில் ஒரு வழி பயணத்திற்கு 85 பவுண்டுகளை ஆல்பர்ட் டிராவல் வசூலித்து இருக்கிறது. இந்திய ரூபாயில் 8 ஆயிரத்தைத் தாண்டும் என்பதும் குறிப்பிடத் தக்கது. இரு வழி பயணம் செய்ய வேண்டுமென்றால் 145 பவுண்டுகளை செலுத்த வேண்டும். இந்திய ரூபாயில் இது 13 ஆயிரத்து 644 என்பதும் குறிப்பிடத் தக்கது.
பயணச் சேவையைத் தொடங்குவதற்கு முன்பு ஆல்பர்ட் டிராவல் இந்த பயணத்தைக் குறித்து மிகவும் சுவாரசியமான ஒரு அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கிறது. அதில் உங்கள் வீட்டில் இருப்பதைப்போன்று அனைத்து வசதிகளையும் இந்த பயணச் சேவையில் பெறமுடியும். படுக்கை வசதி, மின்விசிறி, ரேடியோ என்று உங்கள் பயணம் ஒரு இனிமையான அனுபவமாக அமையும் எனவும் கூறியிருந்தனர். நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக ஆல்பர்ட் டிராவல் பஸ் பல நாடுகளைத் தாண்டி, கிட்டத்தட்ட 8 ஆயிரம் கிலோ மீட்டர் பயணச் சேவையை வழங்கியதாகவும் கூறப்பட்டது. நல்லெண்ணத் தூதரராக பல நாடுகளில் உலா வந்த இந்த பஸ் சேவை இறுதியில் 1976 இல் நிறுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments