விஜய்மல்லையாவை நாடு கடத்தும் வழக்கு: லண்டன் கோர்டி அதிரடி தீர்ப்பு

  • IndiaGlitz, [Monday,December 10 2018]

இந்திய வங்கிகளில் ரூ.9ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவை மீண்டும் இந்தியா கொண்டு வர இந்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வந்தது.

அந்த வகையில் விஜய்மல்லையாவை இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று லண்டன் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் சற்றுமுன் இந்த வழக்கின் தீர்ப்பை லண்டன் கோர்ட் வெளியிட்டது.

இந்த தீர்ப்பின்படி விஜய்மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க லண்டன் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அவரை இந்தியா கொண்டு வர இந்திய அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் விஜய்மல்லையா இந்தியா அழைத்து வரப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த உத்தரவை எதிர்த்து விஜய்மல்லையா மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

 

More News

ஐந்தே நிமிடங்களில் டிரெண்டான 3 ஹேஷ்டேக்: அடிச்சு தூக்கிய அஜித் ரசிகர்கள்

தல அஜித், நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில், டி.இமான் இசையில் உருவாகியுள்ள 'விஸ்வாசம்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'அடிச்சு தூக்கு 'பாடல் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டது.

'விஸ்வாசம்' ஃபர்ஸ்ட்சிங்கிள் ரிலீஸ் அறிவிப்பு

சற்றுமுன்னர் விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட்சிங்கிள் ரிலீஸ் குறித்த தகவலை படத்தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது

கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பிய பவர்ஸ்டார், சிக்கிய மனைவி!...

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் கடத்தப்பட்டதாக அவர் மனைவி, மகள் மாறி மாறி புகார் கொடுக்கவும், பின்னர் புகார் வாபஸ் வாங்கப்படுவதுமாக இருந்த நிலையில் தற்போது பவர்ஸ்டாரின் மனைவி கடத்தப்பட்டுள்ளதாக புகார்

'96', 'பேட்ட' படங்களை சம்பந்தப்படுத்திய மீம்ஸ்: ரசித்து ஷேர் செய்த த்ரிஷா

விஜய்சேதுபதியும், த்ரிஷாவும் இன்னும் '96 படத்தின் பாதிப்பில் இருந்து வெளியே வரவில்லை என்று தெரிகிறது. நேற்று நடைபெற்ற 'பேட்ட' இசை வெளியீட்டு விழாவில்

ஹன்சிகாவை இளவரசியாக மாற்றும் 'மஹா'

கோலிவுட் திரையுலகில் பல நடிகைகள் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடிக்க தொடங்கிவிட்ட நிலையில் அந்த வரிசையில் தற்போது ஹன்சிகா நடிக்கும் படம் 'மஹா'