நான் நன்றாக பாதுகாப்பாக இருக்கின்றேன்: பெயர்க்குழப்பம் குறித்து நடிகர் மாறன் விளக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் நடித்த கில்லி உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகர் மாறன் இன்று காலை கொரோனா பாதிப்பு ஏற்பட்டு காலமானதாக வெளிவந்த செய்தி திரையுலகினர்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இயக்குனர் பா.ரஞ்சித் உள்பட பல திரையுலக பிரபலங்கள் நடிகர் மாறன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஒருசில ஊடகங்களில் நடிகர் மாறனுக்கு பதிலாக விஜய் டிவியில் லொள்ளு சபா புகழ் நடிகர் மாறன் இறந்து விட்டதாக செய்திகள் வெளியானது. இதை பார்த்து லொள்ளுசபா புகழ் மாறன் அதிர்ச்சி அடைந்து இது குறித்து விளக்கமளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது:
நான் நல்லபடியாக இருக்கிறேன், அதே மாதிரி நீங்க எல்லாம் நல்லபடியாகவும், பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாக இருங்கள். கொரனோ பெருந்தொற்று மிகவும் ஆபத்தானது. அதிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் பாதுகாப்பாக இருக்க வேண்டும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்
பெயர் குழப்பம் காரணமாக ஒருசில மீடியாக்களில் தவறான செய்திகள் வெளிவந்ததை அடுத்து லொள்ளுசபா மாறன் இந்த விளக்கத்தை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“நான் நலமுடன் இருக்கிறேன்; நீங்களும் எச்சரிக்கையாக, பாதுகாப்பாக இருங்கள்” - நகைச்சுவை நடிகர் மாறன் #SunNews | #Corona pic.twitter.com/zqgH3xFpJi
— Sun News (@sunnewstamil) May 12, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com