அத்தைக்கு பதிலாக தண்டனை அனுபவிக்க தயாரா? தீபாவுக்கு நடிகர் ஜீவா கேள்வி

  • IndiaGlitz, [Friday,February 24 2017]

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் தமிழக அரசியல் எந்த திசையில் செல்கிறது என்றே தெரியவில்லை. நாளொரு திருப்பமும், பொழுதொரு பிரேக்கிங் நியூஸ்களும் வந்து கொண்டிருக்கின்றது. ஜெயலலிதாவின் கூடவே பல ஆண்டுகள் இருந்த ஒரே தகுதியை வைத்து முதல்வராக நினைப்பவர் ஒருபுறம் என்றால், ஜெயலலிதாவின் உறவினர் என்ற ஒரே தகுதியுடன் இன்னொருவர் புதுக்கட்சியை ஆரம்பித்துள்ளார்.
இன்று புதிய கட்சியை தொடங்கியுள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா குறித்து பல்வேறு ஆதரவு மற்றும் எதிர்ப்பு விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் நடிகர் ஜீவா, தனது சமூக வலைத்தளத்தில் திடீரென அரசியல் குதிப்பவர்களுக்கு தனது ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
ஜெ தீபா, உங்களுக்கு அத்தையின் (ஜெயலலிதா) சொத்துக்கள் வேண்டும், அத்தையின் கட்சி வேண்டும், அத்தையின் பதவிவேண்டும்.. அத்தைக்கு கிடைத்த தண்டனை மட்டும் உங்களுக்கு வேண்டாமா? அத்தையின் வாரிசுதானே..? உங்கள் அத்தையை ஊழல் செய்த குற்றவாளியென உச்ச நீதிமன்றம் உறுதிசெய்த அதே நாளில், அதை ஒரு பெருமையாக நினைத்துக் கொண்டு உங்களால் எப்படி அரசியல் பிர(வேஷம் ) செய்ய முடிகிறது.
உங்களுக்கு அரசியல் ஆசை இருந்தால் அந்த நான்கு ஆண்டு சிறைத் தண்டனையை அவருக்கு பதிலாக நீங்கள் அனுபவித்து உங்கள் தலைவி மீதுள்ள களங்கத்தை போக்கிவிட்டு அரசியலுக்கு வாருங்கள்... மக்களை ஏமாற்றாதீர்கள்.
தீபாவுக்கு, என் தாழ்மையான வேண்டுகோள்... தமிழக மக்கள் ஐம்பது ஆண்டுகளாக ஏமாந்தது போதும். உங்கள் சுயநலத்திற்காக கட்சி ஆரம்பித்து தமிழக மக்களை நீங்களும் ஏமாற்றாதீர்கள் ! தமிழகத்தின் தற்போதய தேவை சுயநல, அனுதாப ஆட்சி இல்லை. அறவழியிலான ஆக்கபூர்வ ஆட்சி," என்று கூறியுள்ளார். நடிகர் ஜீவாவின் கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.

More News

பிரபல இளம் நடிகரின் தாயார் திடீர் மரணம்

நயன்தாரா நடித்த 'மாயா' உள்பட பல படங்களில் நடித்துள்ள இளம் நடிகர் ஆரி. பழனியில் இருந்து சென்னைக்கு வந்து கோலிவுட் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்....

தனுஷின் 'பவர்பாண்டி' இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், என பல்வேறு அவதாரங்களில் கோலிவுட் திரையுலகில் ஜொலித்து வரும் தனுஷ், முதன்முறையாக இயக்கியுள்ள திரைப்படம் 'பவர்பாண்டி'. ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது....

ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபு ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பிரின்ஸ் மகேஷ்பாபு நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது.

ரஜினி படத்திற்காக இறக்குமதி ஆகியுள்ள ஜெர்மனி-இங்கிலாந்து ஸ்டண்ட் இயக்குனர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் முதல் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

விஜய் 61' படமும் '3' செண்டிமெண்டும்....

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'விஜய் 61' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஒருசில செண்டிமெண்ட்டுகள் தற்போது தெரியவந்துள்ளன