காமெடி நடிகர் சேஷு காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களாக உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல காமெடி நடிகர் ’லொள்ளு சபா’ சேஷு சற்றுமுன் காலமானார். அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த சேஷு இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பல திரைப்படங்களில் நடித்தார். குறிப்பாக பாரிஸ் ஜெயராஜ்', `டிக்கிலோனா', `குலு குலு' ஆகிய படங்களை தொடர்ந்து சமீபத்தில் வெளியான ’வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற திரைப்படத்திலும் நடித்தார்
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சேஷு இன்று மதியம் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை காலை 8 மணிக்கு சென்னையில் அவருடைய இறுதி சடங்கு நடைபெறும் என்று அவருடைய குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
பலருக்கும் உதவி செய்யும் குணம் கொண்ட சேஷு, பல குடும்பங்களுக்கு அவர் தன்னால் இயன்ற உதவிகளை செய்திருக்கிறார் என்றும் மேலும் அவர் பல ஏழை எளிய மக்களுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார் என்றும் தெரிகிறது. அவருடைய மறைவு திரை உலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com