'லொள்ளு சபா' நடிகர் சேஷுவுக்கு என்ன ஆச்சு? காவேரி மருத்துவமனையில் அனுமதி..!
- IndiaGlitz, [Friday,March 15 2024]
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களின் மனதை வென்ற நடிகர் சேஷு, திடீரென சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் சேஷு. இவரை லொள்ளு சபா சேஷு என்றே பலர் அழைத்து வந்த நிலையில் ஒரு சில திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். குறிப்பாக சந்தானம், யோகி பாபு உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து சில படங்களில் காமெடி கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் சமீபத்தில் வெளியான ’வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் கூட இவரது கேரக்டர் ரசிகர்களால் பாராட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் லொள்ளு சபா நடிகர் சேஷு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் அவரது உடல்நிலை குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் லொள்ளு சபா சேஷு விரைவில் பூரண நலமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.