முழுவதும் முடிந்தது 'லியோ' படப்பிடிப்பு.. லோகேஷ் எடுத்து கொண்டது எத்தனை நாள் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘லியோ’ படத்தை முழுவதுமாக முடிப்பதற்கு லோகேஷ் கனகராஜ் எடுத்துக் கொண்டது வெறும் 125 நாட்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு சரியான திட்டமிடல் தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் ’மாநகரம்’ படத்தை 45 நாட்களிலும், ’கைதி’ படத்தை 62 நாட்களிலும், ’மாஸ்டர்’ படத்தை 129 நாட்களிலும், ’விக்ரம்’ படத்தை 110 நாட்களிலும், முடிந்த நிலையில் ’லியோ’ படத்தை 125 நாட்களில் முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’லியோ’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்ததை அடுத்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திட்டமிட்டபடி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் நடித்துள்ள ‘லியோ’ படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.
IT'S A WRAP FOR #LEO 🔥🧊
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) July 14, 2023
125 Days of shoot in 6 months!
Thanks to the entire CAST AND CREW who have put their souls into this film!
This journey has been yet again been very close to my heart and personal! 💛
Proud of you boys! 💪🏻🔥 pic.twitter.com/BLv9wZP508
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout