ரஜினியின் 'தலைவர் 171': முக்கிய பணியை முடித்துவிட்டாரா லோகேஷ் கனகராஜ்?

  • IndiaGlitz, [Saturday,May 06 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 171 வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக செய்திகள் கசிந்த நிலையில் தற்போது அந்த படத்தின் ஒரு முக்கிய பணியை லோகேஷ் கனகராஜ் முடித்து விட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’ஜெயிலர்’ என்ற படத்தின் படப்பிடிப்பை முடித்து உள்ளார். அடுத்ததாக அவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் ’லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்புக்காக விரைவில் மும்பை செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் அவர் சிறப்பு தோற்றத்தில் மட்டுமே நடிக்க இருப்பதால் ஒரு சில நாட்களில் அவரது காட்சியின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என கூறப்படுகிறது.

அதன் பிறகு ’ஜெய்பீம்’ ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ரஜினிகாந்த் நடிப்பார் என்று கூறப்படுகிறது. ரஜினிகாந்த் - ஞானவேல் இணையும் படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ரஜினியின் ’தலைவர் 171’ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த படத்திற்கான போட்டோ ஷூட் பணியை லோகேஷ் கனகராஜ் முடித்து விட்டதாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.