உங்களுடன் 'லியோ' படத்தை பார்க்க ஆசைப்படுகிறேன்: பிரபல நடிகருக்கு அழைப்பு விடுத்த லோகேஷ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகருக்கு உங்களுடன் ‘லியோ’ படத்தை பார்க்க ஆசைப்படுகிறேன் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான ’ஜவான்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் பல திரையுலக பிரபலங்கள் ’ஜவான்’ படம் வெற்றி அடைய தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைத்தளத்தில் ’ஜவான்’ திரைப்படம் வெற்றி அடைய தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதற்கு ஷாருக்கான் பதிலளிக்கையில், ‘மிக்க நன்றி, நேரம் கிடைத்தால் ’ஜவான்’ படத்தை பார்க்கவும், மேலும் இந்த படத்தை தமிழில் பார்த்து சரியாக உள்ளதா என்று கூறுங்கள். ’லியோ’ படத்தின் வெற்றிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று பதிவு செய்துள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள லோகேஷ் கனகராஜ், ’ஜவான்’ படத்தை பார்க்க ஏற்கனவே திட்டமிட்டுள்ளேன். ’லியோ’ வெளியானதும் அதை உங்களுடன் சேர்ந்து பார்க்கவும் உங்கள் கருத்தை அறியவும் விரும்புகிறேன்’ என்று கூறியுள்ளார்
Wishing the absolute best to @iamsrk sir, my dear brothers @Atlee_dir, @anirudhofficial, #Nayanthara, @VijaySethuOffl na and the entire cast and crew of #Jawan to be a blockbuster 🔥🔥
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) September 6, 2023
I’m sure you all got it right very much @iamsrk sir, have already planned to watch #Jawan ❤️
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) September 6, 2023
Once #Leo releases would love to watch it with you and know your thoughts on it too 🤗 https://t.co/94JavWAejL
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments