கூப்பிடுங்கள், உடனே வருகிறேன்.. லோகேஷ் கனகராஜ் ஆசையை நிவர்த்தி செய்ய முன்வந்த நடிகர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்று நடந்த திரைப்பட விழா ஒன்றில் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்ட நிலையில் குணச்சித்திர நடிகர் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு அவரை இயக்க வேண்டும் என்று ஆசை என தெரிவித்தார். அப்போது உடனே அந்த நடிகர் நீங்கள் கூப்பிட்டால் உடனே உங்கள் இயக்கத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஹரிஷ் கல்யாண் நடித்த ’பார்க்கிங்’ என்ற திரைப்படம் அடுத்த வாரம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் விழா இன்று நடைபெற்றது. இதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்பட பலர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்எஸ் பாஸ்கர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள நிலையில் இந்த படம், கார் பார்க்கிங் செய்வதில் ஏற்படும் சின்ன பிரச்சனை, பெரிய பிரச்சினையாக மாறியது எப்படி என்ற கதையம்சம் கொண்டது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகிய மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இந்த விழாவில் பேசிய லோகேஷ் கனகராஜ் ’எம்.எஸ். பாஸ்கர் அவர்களை இயக்க வேண்டும் என்று எனக்கு மிகப்பெரிய ஆசை. அது சீக்கிரம் நிறைவேறும் என்று எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அப்போது எம்.எஸ். பாஸ்கர் பேச வந்த போது ‘நீங்கள் தளபதி விஜய் அவர்களை இரண்டு முறை இயக்கி உள்ளீர்கள், நீங்கள் என்னை விட வயதில் குறைவாக இருந்தாலும், மிகப் பெரிய அளவில் புகழ் அடைந்தவர். இன்னும் அதிக புகழ் அடைவீர்கள். நீங்கள் உங்கள் படத்தில் நடிக்க எனக்கு ஒரு வாய்ப்பு மட்டும் கொடுங்கள். உடனே ஓடி வந்து விடுவேன்’ என்று கூறினார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
#Parking Pre release event:#MSBhaskar about Loki: Having directed #ThalapathyVijay twice, your fame is highly valued, despite being younger, Consider a call for collaboration 😍👌🏻@Dir_Lokesh: Excited to work with #MSBhaskar. Hoping it happens soon! ❤️pic.twitter.com/lMcIXaZ3VS
— KARTHIK DP (@dp_karthik) November 25, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments