LCU-வில் இணைகிறாரா தல? லோகேஷ் கனகராஜ் சூப்பர் தகவல்!
- IndiaGlitz, [Thursday,November 10 2022]
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ’விக்ரம்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பின்னர் அவரை ரசிகர்கள் ’லோகேஷ் சினிமா யுனிவர்ஸ்’ என்ற LCU பட்டத்தை அளித்து உள்ளனர் என்பது தெரிந்ததே. ஏனெனில் அவருடைய முந்தைய படங்களின் கேரக்டர்கள் புதிய படங்களில் இணைந்து வருவதை அடுத்தே இந்த பட்டம் கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ‘தளபதி 67’ படத்தில் கூட அவருடைய முந்தைய படங்களில் கேரக்டர்கள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை டி20 அரையிறுதி போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியின்போது ஆர்ஜே பாலாஜி நடித்த ’சிங்கப்பூர் சலூன்’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்.
அதன் பின்னர் அவர் தனது LCUயுனிவர்ஸில் தல தோனியை இணைக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். அவருடைய அடுத்த படத்தில் அதாவது விக்ரம் மூன்றாவது பாகத்தில் ரோலக்ஸ் மற்றும் தல தோனி இணைந்து நடித்தால் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பார்த்ததற்கே ஆச்சரியமாக உள்ளது.
இந்த நிலையில் கிரிக்கெட் வர்ணனையாளர் ’தளபதி 67’ படத்தின் அப்டேட் கொடுங்கள் என்று கேட்டபோது ’தயவுசெய்து அதை மட்டும் கேட்காதீர்கள், அதை தவிர வேறு என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்’ என்று லோகேஷ் கனகராஜ் கூறினார். ஆனால் அதே நேரத்தில் டிசம்பரில் ‘தளபதி 67’ படத்தின் அப்டேட் கண்டிப்பாக வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.