'லியோ' ரிலீஸ் ஆக சரியாக ஒரே வாரம்.. உதவி இயக்குனர்களுடன் லோகேஷ் எங்கே சென்றார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படம் வெளியாக சரியாக இன்னும் ஒரே ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது இயக்குனர் குழு உடன் திருப்பதி சென்று ஏழுமலையானை சுவாமி தரிசனம் செய்து உள்ளார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’லியோ’ திரைப்படம் வரும் 19ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கான அனைத்து பணிகளும் முடிந்து விட்டது என்றும் சென்சார் செய்யப்பட்டு ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ’லியோ’ திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது இயக்குனர் குழு உடன் திருப்பதி சென்றுள்ளார். அங்கு அவர் ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு கோயிலை சுற்றி வரும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சமீப காலமாக பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் போது அந்த படத்தின் குழுவினர் திருப்பதி சென்று வழிபட்டு வருகின்றனர். ‘ஜவான்’ திரைப்படத்தின் ரிலீசுக்கு முன்னர் ஷாருக்கான் கூட நயன்தாராவுடன் திருப்பதி சென்று வந்தார் என்பதும் தெரிந்ததே.
Our @Dir_Lokesh and @MrRathna walking to Tirupathi Tirumala for the mega success of #Leo 🙏 pic.twitter.com/8n2uyscaij
— Vijay Fans Trends 🔥🧊 (@VijayFansTrends) October 11, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments