விக்ரம்' 'கைதி' போலவே 'லியோ'விலும் ரெண்டு பாடல்.. வேற லெவல் தகவல்..!

  • IndiaGlitz, [Tuesday,October 10 2023]

பழைய திரைப்படங்களின் பாடல்களை புதிய படங்களில் காட்சிகளுக்கு ஏற்ப பயன்படுத்துவது தற்போதைய இளைய தலைமுறை இயக்குனர்களின் டிரெண்டாக உள்ளது. அந்த வகையில் ’கைதி’, ‘விக்ரம்’ ஆகிய திரைப்படங்களில் ஸ்டண்ட் காட்சிகளின் போது பழைய திரைப்பட பாடல்களை லோகேஷ் கனகராஜ் பயன்படுத்திய நிலையில் அதேபோல் ’லியோ’ படத்திலும் பயன்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’கைதி’ திரைப்படத்தில் ’ஜும்பலக்கா ஜும்பலக்கா’ என்ற பாடல் ’ஆசை அதிகம் வச்சி’ என்ற பாடலும் சண்டை காட்சிகளின் போது பயன்படுத்தப்பட்டது. இது ரசிகர்களுக்கு வித்தியாசமாக இருந்தது.

அதேபோல் ’விக்ரம்’ படத்தில் சிறையில் நடக்கும் சண்டை காட்சிகளின் போது ’சக்கு சக்கு’ என்ற பாடல் பின்னணியில் ஒலித்தது என்பது தெரிந்ததே. இந்நிலையில் விஜய் நடித்த ’லியோ’ படத்தில் இரண்டு பழைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆக்ஷன் காட்சிகளின் போது இந்த பாடல் ஒலிக்கும் என்றும் கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மொத்தத்தில் ’லியோ’ படத்தில் உள்ள ஒவ்வொரு தகவலும் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.