கமல்ஹாசனை இளமையாக காண்பிக்க ரூ.10 கோடி செலவா? 'விக்ரம்' படத்தின் ஆச்சரிய தகவல்

கமல்ஹாசன் நடித்துள்ள ‘விக்ரம்’ திரைப்படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசனை இளமையாக காண்பிக்க ரூபாய் 10 கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், ஷிவானி நாராயணன் உள்பட பலரது நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான திரைப்படம் ‘விக்ரம்’. இந்த படத்தில் பிளாஷ்பேக் காட்சிகளில் கமல்ஹாசனை இளமையாக காட்டுவதற்காக De Ageing என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்காகவே ரூபாய் 10 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 1886-ம் ஆண்டு வெளிவந்த ‘விக்ரம்’ படத்தில் உள்ள கமல் போல 2022 ‘விக்ரம்’ படத்தில் சில காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதை வைத்து பார்க்கும்போது 1986ல் வந்த ‘விக்ரம்’ படத்தின் தொடர்ச்சி தான் 2022-ல் வரும் ‘விக்ரம்’ படம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஒவ்வொரு படத்திலும் புதுமையான தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் கமல்ஹாசன், இந்த படத்தில் De Ageing என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருப்பது கோலிவுட் திரையுலகினரை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

More News

கதை சொல்ல வந்தவருக்கு ரூ.5 லட்சம் கொடுத்தேன்:  நடிகர் விமல் பரபரப்பு தகவல்

என்னிடம் கதை சொல்ல வந்தவருக்கு ஐந்து லட்சம் கொடுத்தேன் என நடிகர் விமல் தான் ஏமாந்த கதையை செய்தியாளர்களிடம் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கமல்-ரஜினி நடிக்க இருந்த படத்தில் விஜய்? 'தளபதி 67' படம் குறித்த ஆச்சரிய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருந்த திரைப்படத்தில் தளபதி விஜய் நடிக்க இருப்பதாகவும் அந்த படம்தான் 'தளபதி 67'  என்றும் கூறப்படுகிறது. 

ஆஸ்கார் சர்ச்சைக்கு பின் இந்தியா வந்த வில்ஸ்மித்: வைரல் புகைப்படங்கள்

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளர் மற்றும் நடிகர் கிறிஸ் ராக் என்பவரை கன்னத்தில் அடித்த சர்ச்சைக்கு பின் ஹாலிவுட் நடிகர் வில்ஸ்மித் இந்தியா வந்துள்ளார்

'டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்' படத்திற்கு தடை: என்ன காரணம்?

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் குவைத், கத்தார் ஆகிய நாடுகளில் தடை செய்யப்பட்ட நிலையில் தற்போது 'டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்' திரைப்படத்திற்கும் ஒரு நாட்டில் தடை செய்யப்பட்டிருப்பதாக

சூப்பர்ஹிட் 'கேஜிஎப் 2': யாஷ் உள்பட நடிகர்களின் சம்பளம் எவ்வளவு?

யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவான 'கேஜிஎப் 2' திரைப்படம் வெற்றி அடையும் என எதிர்பார்த்தாலும் ரூபாய் 700 கோடிக்கு மேல் வசூல் செய்யும் அளவுக்கு மிகப்பெரிய பிரமாண்டமான வெற்றி