கமல்ஹாசனை இளமையாக காண்பிக்க ரூ.10 கோடி செலவா? 'விக்ரம்' படத்தின் ஆச்சரிய தகவல்
- IndiaGlitz, [Saturday,April 23 2022]
கமல்ஹாசன் நடித்துள்ள ‘விக்ரம்’ திரைப்படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசனை இளமையாக காண்பிக்க ரூபாய் 10 கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், ஷிவானி நாராயணன் உள்பட பலரது நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான திரைப்படம் ‘விக்ரம்’. இந்த படத்தில் பிளாஷ்பேக் காட்சிகளில் கமல்ஹாசனை இளமையாக காட்டுவதற்காக De Ageing என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்காகவே ரூபாய் 10 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 1886-ம் ஆண்டு வெளிவந்த ‘விக்ரம்’ படத்தில் உள்ள கமல் போல 2022 ‘விக்ரம்’ படத்தில் சில காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதை வைத்து பார்க்கும்போது 1986ல் வந்த ‘விக்ரம்’ படத்தின் தொடர்ச்சி தான் 2022-ல் வரும் ‘விக்ரம்’ படம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஒவ்வொரு படத்திலும் புதுமையான தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் கமல்ஹாசன், இந்த படத்தில் De Ageing என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருப்பது கோலிவுட் திரையுலகினரை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.