'மாஸ்டர்' டெக்னிக்கை 'லியோ'விலும் பயன்படுத்தும் லோகேஷ் கனகராஜ்: மாஸ் தகவல்..!

  • IndiaGlitz, [Saturday,May 13 2023]

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தில் பயன்படுத்திய டெக்னிக்கை 'லியோ’ படத்திலும் பயன்படுத்த இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு சிறு கேரக்டரில் லோகேஷ் கனகராஜ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்திலும் அவர் சிறு கேரக்டரில் நடித்திருந்த நிலையில் அதே டெக்னிக்கை தற்போது 'லியோ’ படத்திலும் அவர் பயன்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஆர்ஜே பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன் என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் லோகேஷ் கனகராஜ் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் ஆகிய இருவரும் சேர்ந்து ஒரு திரைபடத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பாரதிராஜா, எஸ்ஜே சூர்யா, செல்வராகவன் உட்பட பல இயக்குனர்கள் தமிழ் திரை உலகில் நடிகர்களாகவும் ஜொலித்துவரும் நிலையில் எதிர்காலத்தில் முழு நேர நடிகராக லோகேஷ் கனகராஜ் மாறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.