'மாஸ்டர்' டீசர், டிரைலர் எப்போது? லோகேஷ் கனகராஜ் தகவல்!

  • IndiaGlitz, [Friday,November 06 2020]

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் ரிலீஸ்க்கு கடந்த ஏப்ரல் மாதமே தயாராக உள்ளது என்பதும் ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 6 மாதங்களாக இந்த படம் ரிலீசாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் வரும் 16ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்ததை அடுத்து விரைவில் ‘மாஸ்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படும் என தெரிகிறது. இந்த நிலையில் ‘மாஸ்டர்’ படத்தின் டீசர், டிரைலர் ரிலீஸ் எப்போது என்ற கேள்விக்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், ‘மாஸ்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படாமல் டீசர், டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளி வர சாத்தியமில்லை என்று கூறினார்

மேலும் ‘மாஸ்டர்’ படத்தின் டீசர், ட்ரெய்லர் ஆகிய இரண்டுமே தயாராக இருப்பதாகவும் அவை இரண்டும் வெளிவரும்போது ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

நவம்பர் 16ஆம் தேதி திரையரங்குகள் திறந்த பின்னர் ‘மாஸ்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி தக்க நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் அதன்பின்னர் ‘மாஸ்டர்’ படத்தின் டீசர் மற்றும் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளிவரலாம் என்றும் கூறப்படுகிறது

விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படம் அனிருத் இசையில், சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.

More News

சூர்யா ரசிகர்களுக்கு விருந்தாக வரும் 'நாலு நிமிஷம்'

சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் வரும் தீபாவளி விருந்தாக ஓடிடியில் வெளியாக இருக்கிறது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே

கட்டியணைத்து முத்தமிடும் நட்சத்திர ஜோடி: வைரலாகும் புகைப்படங்கள்!

தென்னிந்திய திரையுலகின் நட்சத்திர ஜோடிகளில் ஒன்று ஒருவரை ஒருவர் கட்டியணைத்து முத்தமிடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உதயநிதியின் அடுத்த படம்: நாயகி, இயக்குனர் அறிவிப்பு!

நடிகர் உதயநிதி ஸ்டாலினின் அடுத்த படத்தை இயக்குவது மகிழ்திருமேனி என்ற செய்திகள் ஏற்கனவே வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அந்த செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரபூர்வ அறிவிப்பு

கேப்டன்சி டாஸ்க்: தவறை உணர்ந்து பிராயசித்தம் செய்த பாலாஜி!

இந்த வாரம் நடைபெற்ற கேப்டன்சி டாஸ்க்கில் சோம், பாலாஜி மற்றும் சம்யுக்தா ஆகிய மூவர் கலந்து கொண்டிருந்த நிலையில் சோம் ஜெயிக்க கூடாது என்றும் அவர் ஒரு கைப்பொம்மை என்றும்

திமுக 7 பேரின் விடுதலையை நிராகரித்து விட்டு, அதிமுக மீது குற்றம் சொல்வதா??? தமிழக முதல்வர் காட்டம்…

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சுமார் 30 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் நளினி, வி.ஸ்ரீகரன் என்ற முருகன்,