நான் விஜய்சேதுபதிக்கு கதையே சொல்லவில்லை: லோகேஷ் கனகராஜ்

  • IndiaGlitz, [Sunday,March 15 2020]

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியதாவது:

விஜய் அவர்களுடன் இணைந்து பணிபுரியும் வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள் மூவருக்கும் எனது நன்றிகள்.

நான் விஜய்சேதுபதியிடம் கதையே சொல்லவில்லை. ஒரே ஒரு லைன் மட்டும் தான் கூறினேன். உன்னை நம்பி நடிக்கிறேன் என்று விஜய்சேதுபதி என்னிடம் கூறினார். அவருக்கு எனது நன்றி. மற்ற நடிகர்-நடிகைகள் அனைவரும் என்னுடைய நண்பர்கள்தான். எனவே அவர்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர்களிடம் தனியாக நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

மாஸ்டர் திரைப்படம் விஜய் அவர்களின் வேறு ஒரு பரிணாமமாக இருக்கும். இந்த படத்தின் கதை சொல்லும் விதமே வித்தியாசமாக இருக்கும். இதுவரை யாரும் பார்க்காத விஜய்யை இந்த படத்தில் பார்ப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.

இந்த படத்தின் டைட்டிலை கடைசிவரை ’வாத்தி’ என்றுதான் வைத்திருந்தோம். கடைசியில் திடீரென ‘மாஸ்டர்’ என்று மாற்றினோம். இந்த படத்தின் அனைத்து அனுபவங்களும் எனக்கு புதிதாக இருந்தது. எனது முந்தைய இரண்டு படங்களிலும் ஹீரோவுக்கு ஒரே ஒரு ட்ரஸ் தான் இருக்கும். அதனால் காஸ்ட்யூம் டிசைனருடன் நான் அதிகம் பேசியதே இல்லை. ஆனால் இந்த படத்தில் விஜய்க்கு மட்டுமே 200க்கும் மேல் காஸ்ட்யூம்கள். இதுவே எனக்கு புதுவித அனுபவமாக இருந்தது. வழக்கமாக விஜய் தன்னுடைய படத்தில் என்னென்ன செய்வாரோ, அதையெல்லாம் அவர் இந்த படத்தில் செய்யவில்லை’ என்று லோகேஷ் கனகராஜ் பேசினார்.

More News

விஜய் நடிக்கவில்லை, நடித்தால் என்னிடம் மாட்டியிருப்பார்: விஜய்சேதுபதி

விஜய் போன்ற ஒரு மாஸ் ஹீரோவுடன் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததை நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்

முதல்முதலாக தமிழில் பேசுகிறேன்: மாளவிகா மோகனன்

விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகி மாளவிகா மோகனன் பேசியதாவது

விஜய்சேதுபதி கவலைப்பட வேண்டாம்: ஆறுதல் சொன்ன அனிருத்

விஜய் நடித்த மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விழா நாயகன் அனிருத் பேசியதாவது:

மாஸ்டர் பாடல் எழுதிய அனுபவம்: பாடலாசிரியர்களின் பேச்சு

தளபதி விஜய் நடித்த ''மாஸ்டர்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த விழாவில் பாடல்கள் எழுதிய விக்னேஷ் சிவன், அருண்ராஜா காமராஜ் மற்றும் விஷ்ணு ஆகியோர் பேசினர்.

மாஸ்டர் விழாவில் சாந்தனு கூறிய குட்டி ஸ்டோரி

மாஸ்டர் ஆடியோ விழாவில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நடிகர் சாந்தனு பாக்யராஜ் பேசியதாவது: