வெறும் 50 ஆயிரம் ரூபாயில் சின்மயி பிரச்சனையை முடித்த லோகேஷ் கனகராஜ்.. எப்படி தெரியுமா?
- IndiaGlitz, [Tuesday,February 27 2024]
வெறும் 50 ஆயிரம் ரூபாயில் சின்மயி குறித்த பிரச்சனையை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முடித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் டப்பிங் யூனியன் சங்கத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் ஊடகம் ஒன்றில் பேட்டி அளித்த போது ’பாடகி சின்மயி டப்பிங் சங்கத்தில் தற்போது உறுப்பினராக இல்லை என்றும் ஆனால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’லியோ’ திரைப்படத்தில் த்ரிஷாவுக்காக அவர் டப்பிங் பேசினார் என்றும் நான் டப்பிங் யூனியன் தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்தால் இது குறித்து விசாரணை செய்வேன் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் டப்பிங் யூனியனில் உறுப்பினராக இல்லாத ஒருவரை ஒரு திரைப்படத்தில் பயன்படுத்த வேண்டுமானால் ஒரு குறிப்பிட்ட தொகையை டப்பிங் யூனியனுக்கு செலுத்தி அவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற விதி உள்ளது என்பதை லோகேஷ் கனகராஜ் அறிந்தார்.
இந்த விதியின்படி ’லியோ’ படத்தில் த்ரிஷாவுக்காக டப்பிங் பேச சின்மயி அழைக்கப்பட்ட நிலையில் அவருக்காக லோகேஷ் கனகராஜ் ரூபாய் 50 ஆயிரத்தை டப்பிங் யூனியனில் செலுத்திவிட்டாராம். இதனை டப்பிங் யூனியன் சங்க நிர்வாகிகளும் உறுதி செய்துள்ளனர். எனவே இந்த பிரச்சனை தற்போது முடிவுக்கு வந்துவிட்டதாக கருதப்படுகிறது.
சின்மயி பிரச்சனையை வெறும் 50 ஆயிரம் ரூபாயில் முடித்துவிட்ட லோகேஷ் கனகராஜ், இந்த பணத்தை தயாரிப்பாளரிடம் கூட கேட்காமல் அவரே தனது கையில் இருந்து செலுத்தி விட்டதாகவும் கூறப்படுகிறது.