close
Choose your channels

சென்னை புத்தக கண்காட்சியில் லோகேஷ் கனகராஜ் புத்தகங்கள்.. வருங்கால இயக்குனர்களுக்கு வரப்பிரசாதம்!

Friday, January 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் 46வது புத்தகக் கண்காட்சி இன்று தொடங்கப்பட்ட நிலையில் இந்த புத்தக கண்காட்சியில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய நான்கு படங்களின் திரைக்கதை புத்தகங்கள் விற்பனையாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் திரைப்படமான ’மாநகரம்’ மற்றும் ’கைதி’ ’மாஸ்டர்’ ’விக்ரம்’ ஆகிய நான்கு திரைப்படங்களின் திரைக்கதை புத்தகம் இன்று சென்னை புத்தக கண்காட்சியில் வெளியாகி உள்ளது.

இந்த புத்தகங்களை பேசாமொழி பதிப்பகம் வெளியிட்டுள்ளதாகவும் புத்தக கண்காட்சியில் பொதுமக்கள் பார்வைக்கு இந்தப் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இந்த படங்களின் திரைக்கதை புத்தகங்கள் வருங்கால இயக்குனர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் என்றும் ஒரு படத்தின் திரைக்கதை எப்படி அமைக்க வேண்டும் என்ற வழிகாட்டி இந்த புத்தகத்தில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்த நான்கு புத்தகங்களும் அதிக அளவில் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ படத்தின் திரைக்கதை புத்தகமும் இந்த புத்தக கண்காட்சியில் கிடைக்கும் என நேற்று அறிவிக்கப்பட்டது என்பதை பார்த்தோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment