சென்னை புத்தக கண்காட்சியில் லோகேஷ் கனகராஜ் புத்தகங்கள்.. வருங்கால இயக்குனர்களுக்கு வரப்பிரசாதம்!

  • IndiaGlitz, [Friday,January 06 2023]

சென்னையில் 46வது புத்தகக் கண்காட்சி இன்று தொடங்கப்பட்ட நிலையில் இந்த புத்தக கண்காட்சியில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய நான்கு படங்களின் திரைக்கதை புத்தகங்கள் விற்பனையாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் திரைப்படமான ’மாநகரம்’ மற்றும் ’கைதி’ ’மாஸ்டர்’ ’விக்ரம்’ ஆகிய நான்கு திரைப்படங்களின் திரைக்கதை புத்தகம் இன்று சென்னை புத்தக கண்காட்சியில் வெளியாகி உள்ளது.

இந்த புத்தகங்களை பேசாமொழி பதிப்பகம் வெளியிட்டுள்ளதாகவும் புத்தக கண்காட்சியில் பொதுமக்கள் பார்வைக்கு இந்தப் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இந்த படங்களின் திரைக்கதை புத்தகங்கள் வருங்கால இயக்குனர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் என்றும் ஒரு படத்தின் திரைக்கதை எப்படி அமைக்க வேண்டும் என்ற வழிகாட்டி இந்த புத்தகத்தில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்த நான்கு புத்தகங்களும் அதிக அளவில் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ படத்தின் திரைக்கதை புத்தகமும் இந்த புத்தக கண்காட்சியில் கிடைக்கும் என நேற்று அறிவிக்கப்பட்டது என்பதை பார்த்தோம்.

More News

ஜிவி பிரகாஷின் அடுத்த படம்.. தனுஷ் வெளியிட்ட சூப்பர் வீடியோ!

தமிழ் திரை உலகின் இசையமைப்பாளர் மற்றும் ஹீரோ என இரண்டு குதிரைகளில் ஒரே நேரத்தில் சவாரி செய்துவரும் ஜிவி பிரகாஷ் தற்போது சில படங்களில் நடித்தும் சில படங்களில் இசையமைத்தும்

ஒரே படத்தில் மூன்று சூப்பர் ஸ்டார்.. 'ஜெயிலர்' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

ஓடிடி படங்களுக்கும் சென்சார் அவசியம்: கமல், ரஜினி பட நடிகை கருத்து!

ஓடிடி படங்களில் வரம்பு மீறிய ஆபாச காட்சிகள் மற்றும் வன்முறை காட்சிகள் இடம் பெறுவதால் ஓடிடி படங்களுக்கும் சென்சார் தேவை என கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட பல பிரபலங்களுடன்

ரஜினியின் நெருங்கிய நண்பர் திடீர் மரணம்.. இரங்கல் தெரிவித்து டுவிட்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் திடீரென காலமானதை அடுத்து ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். 

ஆக்சன் கிங் அர்ஜூனின் இரண்டாவது மகளா இவர்? செம கிளாமர் புகைப்படங்கள்!

 ஆக்சன் கிங் அர்ஜுனின் இரண்டாவது மகளின் கிளாமர் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அர்ஜூனின் மகளா இவர்? என ஆச்சரியத்தில் நெட்டிசன்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.